பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

52 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

リ響

படிப்பதை கிறுத்து

அருணன் என்னும் சிறுவன் வீட்டில் பாடம் படித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது, அவ னுடை தாய் அவனைக் கூப்பிட்டாள். அவனோ இருந்த இடத்தில் இருந்தபடியே, என்ன?’ என்று

கேட்டான்.

"இங்கே ஒரு சிறு வேலை இருக்கிறது. நீ இங்கே வந்து அந்த வேலையைச் செய்துவிட்டுப் போ’ என்றாள் அவன் தாய்.

நான் இப்பொழுது படித்துக் கொண்டிருக் கிறேன், வர இயலாது” என்றான்.

'நான் சொல்வதைத் தட்டலாமா? பெற்றோ ருக்கு கீழ்ப்படிந்து நடப்பது அல்லவா படிப்பதற்கு அழகு என்றாள் தாய்.

அதற்கு நான் என்ன செய்வது? ஒளவையார்

ஒதுவதொழியேல் என்று கூறியுள்ளார். அதைப்

பின்பற்றி நான் நடக்கின்றேன்' என்றான் சிறுவன். *

அவர்களுடைய உரையாடலைக் கேட்டுக் கொண்டு வந்த புலவர், 'தம்பி, ஓதுவது ஒழியேல் என்றார், சிறுவன் மகிழ்ச்சியோடு, அம்மா! புலவர் சொன்னதைக் கேட்டாயா? அவர் கூட என் சொல்லை ஆதரிக்கிறார்’ என்றான்.