பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

முல்லை பிஎல். முத்தையா 55。

S。

ககைக்கு என்ன குறைவு?

சுப்பிரமணியக் கவிராயரும், முத்துச்சாமி புலவ. ரும் ஓர் திண்ணையில் இருந்து, உரையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது, அவ்வழியாகச் சென்று கொண்டி ருந்த மற்றொரு புலவர் அவர்களைப் பார்த்து, "என்ன, நகை பலமாக இருக்கிறதே?’ என்றார்.

"ஆம், முத்தும் மணியும் சேர்ந்தால், நகைக்கு என்ன குறைவு?’ என்றார் கவிராயர்.

(முத்து - முத்துச்சாமிப் புலவர், மணி - சுப்பிர மணியக் கவிராயர்: நகை அணிகலம், சிரிப்பு).

புலவரின் சினம்

குறுநில மன்னரைக் கண்டு பரிசு பெறுவதற். காக, ஒரு புலவர் தம் மனைவியுடன் காட்டு வழியில் நடந்து வந்துகொண்டிருந்தார். - அப்போது, கள்வன் ஒருவன், புலவர் மனைவி வின் தாலியைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டான்.

புலவர் அதனால் வருத்தமுற்று வேகமாக வந்தார். மன்னரைப் பார்த்து மன்னரே! உம் ஆட்சியில், புருஷன் இருக்க, தாலி அறுமோ?’’ என்று கோபமாகக் கேட்டார்.