பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76. புலவர்கள் உதிர்த்த முத்துக்க்ள்

தால், உணவு விடுதியில் சாப்பிடுவேன். இன்று. இராப் பொழுதுக்கு இவ்விடமே உணவுக்கு ஏற்பாடு செய்து விடுங்கள்’’ என்று கூறினார். * . . . "இரவு என்ற சொல்லுக்குப் பிச்சை, ஐயம்’ என்ற பொருள் கொண்டு அதனால் புலவர் அவ்வாறு கூறியுள்ளார் என நண்பர் புரிந்து கொண்டார். - of

во தையற்காரரின் தடுமாற்றம் சட்டை முதலானவற்றைத் தைப்பதற்காக புலவர், வாடிக்கையான தையற்காரரிடம் கொடுத் திருந்தார். தைக்க வேண்டியவை எல்லாம் தைத்து முடிந்தன. சிறிதளவு துணி மீதி இருந்தது. 'அதில், தங்கள் சிறிய பையனுக்கு ஒரு சட்டை தைக்கலாம்' என்றார் தையற்காரர்.

'உடனே புலவர், “ஆந்தை, ஆந்தை' என்று கூறினார். . . . * . . . . ." . .

புலவர் கூறியதைக் கேட்டதும் தையற்காரர். - ஆந்தைபோல் விழித்து, "ஐயா, நான் சொன்னது என்ன? நீங்கள் ஆந்தை,ஆந்தை' என்கிறீர்களே!' என்றார். . * . . . . . . . . உடனே புலவர், "நீ சொன்னபடி, ஆம்தை; ஆம்தை என்றுதானே சொன்னேன். உனக்கு அது புரியாமல், ஆந்தைபோல் விழிக்கிறாய்!” என்றார்.

(ஆம்' என்பதும் தை என்பதும் ஒன்று சேர்ந்து புணர்ந்தால், ஆந்தை' என்றுதான் வரும்.)