பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 கம்பன் கலை நிலை

கவியைக் கம்பர் பாடியிருப்பாரோ? என்று நாம் நினைந்துகொள்ப படி அது நிலவி நிற்கின்றது.) “ சிறியவர் மருண்ட புன்பை மேலவர் மாற்றுவர் என்றதில் இது வழக்கே என்றது இய |ப்ள கிகழ்ச்சியாய் உலகறிந்த வழக்கமாய் எங்கும் அது வழங்கி ை கின்றதென்பது விளங்க என்க. மருட்சி நீங்கித் தெரு : யடைந்து எல்லோரும் மேலோாாயிருக்கவேண்டும் என்பது கருத்து.

(இரகங்களைப் பற்றிச் சொல்ல நேர்க்க இடத்தில் இங்ானம் ஒரு நல்ல நீதியையும் நயமாகச் சொல்லி யருளினர்.

இவ்வண்ணமே யானே குதியை ஒட்டகம் முதலியனவும், ஆடவர் மகளிர் எல்லோரும் அங்கே அமர்ந்திருந்த நிலைமைகய யும், உவந்து புரிந்த உல்லாசங்களையும், இடையிடையே நிகழ்ந்த சல்லா பங்களையும், உணர்வு நலம் கதும்ப நம் கவியாசர் உாை’ திருக்கிரு.ர். அப்பாடல்கள் யாவும் பெரும்பாலும் சிருங்கா ாசமாய் உவகைச் சுவைக்கு இடமாயுள்ளன.) சந்திாசைலத்தில் அன்று தங்கி யிருந்து மறுநாள் எழுத்து சேனைகள் நடந்து சோணை நதி என்னும் அழகிய பெரிய ஆற்றங்கரையை அடைக் தன. குளிர் பூம்பொழில்களும், இளமாக்காவுகளும், நறுமலர்ப் பொய்கைகளும், புடைசூழ்ந்துள்ள அங்க இனிய இடத்தில் ஆறுதலாக அரசர்பிரான் தங்க நேர்ந்தான். o

மாலைவாவும் மகளிரும் மைக்கரும் சோலைகளில் புகுக் . பூக்கள் பறித்துப் பொழிலாட்டயர்ந்து பூம்புனலாட எம்பலோ டெழுந்தனர். பரிமளம் கமழ்ந்த அக்குளிர் பூங்காவுள் எழில் வளர் மகளிர் நளிர்மலர் கொய்ய இடங்கள்தோறும் பாங் து நெருங்கினர். கருண மங்கையர் இங்ானம் சார்ந்தபோது அங்கே நேர்ந்த அதிசயங்களை மதிகலங் கனியக் கவி மிகவும் ய மாகக் கூறியிருக்கிரு.ர். சுவை நிறைந்த அந்த இனிய காட்சிகள் பலவகை நிலைகளில் பாவி நிலவியுள்ளன. சில அடியில் வருவன காண்க.

சோலைக்குயில்கள் சோர்ந்து நின்றன. பாசிழைப் பரவை யல்குல் பண்தரு கிளவி தண்தேன் மூசிய கூந்தன் மாதர் மொய்த்தபே ரமலே கேட்டுக்

கூசின வல்ல பேச நாணின குயில்க ளெல்லாம் வாசகம் வல்லார் முன்னின்று யாவர்வாய் திறக்கவல்லா ?