பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 கம்பன் கலை நிலை

கூச்சமும் காணமும் பேச்சைக் கடைப்படுத்தும் ஆகலான் பேசாமைக்கு எதுக்களாக அவை ஈண்டுப் பேச நேர்ந்தன.

பறவைகளுள் குயிலினங்கள் குரலினிமைக்குப் பெயர்பெற் றவையாதலால் இனிய சொல்லுக்கு உறவுரிமையாகக் காவியங் களில் அவை மிகவும் பாராட்டப்பட்டுள்ளன.

இனிய கீதத்தைப்பற்றிப் பேசுங்கால் கோகில டகானம் என்பர். கோகிலம்=குயில். இசையில் இங்கனம் இசைபெற் மறுள்ள குயிலோசையினும் இனிய மொழியுடையாய் அம்மங் கையர் சிறந்திருந்தனர் என்பதாம். அவரது பேச்சினிமையைக் குறித்துக் கவி கற்பனை செய்து பேசியிருக்கும் இனிமை பேரு

வகைக்கு இடமாயுள்ளது. l

Lதாம் புனேந்து குறித்தகைக் தெளிவுபடுத்தி வலியுறுத்தற்கு உலக நிகழ்ச்சியில் அனுபவசாாமான ஒர் இனிய பொருளை முடிவில் எடுத்துக்காட்டி முடித்திருக்கிரு.ர்.

‘வாசகம் வல்லார் முன்நின்று யாவர்வாய் திறக்கவல்லார்?’ என்னும் இந்த வாசகம் யாவரும் நேசமுடன் கினைந்து மகிழ வாசம் கமழ்ந்து வந்துள்ளது.)

சொல்லிலும் பொருளிலும் பல்வகை கலங்கள் படிந்து எல் - லாரும் விழைந்து கேட்கும்படி விளைந்து வருகின்ற உயர்ந்த பேச்சாளிகள் முன்னே பிறர் எழுந்து பேச நானுவர் ஆதலால் அங்க மானுட அனுபவம் பறவைகளாகிய குயில்களிடமும் கூடி யிருந்தது என்று இங்கனம் பாடியிருக்கிரு.ர். பிறர் வாயடங்க வி.றுகொண்டுள்ள கவியின் வாசக வன்மையும் ஊகமாயிங்கே

உனா வந்தது.

2. மலர்கள் மலர்ந்து நிலவியிருந்த மெல்லிய பூங்கொடி களை வளைத்து மங்கையர் பூப்பறித்தனர்; அங்கனம் பறிக்குங் கால் அவர் காலடியில் பூக்கள் பல உதிர்ந்தன ; மலர் கொய்யும் பொழுது நந்தனவனத்தில் நேர்ந்த இந்த நிகழ்ச்சியில் மனிதர் அனுபவமான இனிய ஒரு நிலையை இடைப்புகுத்திக் கவி இங்கே ஒர் இன்ப ஆடல் புரிந்திருக்கின்றார். தீண்ட லும் நீண்ட கொம்பர் அடியில் மென்பூச்சொரிந்து தாழ்ந்த’ என்றது அங்கே