பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

==

5. தசரதன் தன்மை 369

றெடுத்து வெய்துயிர்த்தாள். அந்த மூச்சுக் காற்றில் நெருப்புச் வாலே வீசி நின்றது. ஆதலால்,

?? ஆர் என்னலோடும், அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள்’

=- so -

என்றார். அவளுடைய வெப்பமும் விம்மலும் இதல்ை அறிய லாகும். சொன்னவுடனே இன்னவாருள்ை என்பதாம்.)

இவ்வாறு கோபங்கொண்டு இவள் கொதித்து அழும்படி கொடுமையான வார்க்கைகள் இங்கே என்ன நிகழ்ந்தன ஆர் ? என்று மிகவும் இகமாகக் கேட்டதைத் தவிர வேறு ஒன்றும் அவன் கடுமையாகச் சொல்லவில்லையே ! அப்படி இருக்க இப் படிக் கொடுமூச்செறிந்து இவள் கொதிப்பானேன்? கொஞ்சம் சிந்தித்து நோக்கவேண்டும். அவளது நெஞ்சு நிலை நேரே தெளிவாய் எவரும் எளிதாக அறியமுடியாதபடிநுனுகியுள்ளது.

== யார் ? ‘ என்று அவன் வினவியதே இவள் மனநிலையை மாற்றிச் சினம் மிகச் செய்தது. நான் வந்து கண்ணேப் பொத் தினேன் . இவர் யார் என்று கேட்டாரே ! அப்படியானல் வேறு பல மகளிரும் இவரோடு இப்படிமுன்புவிளையாடியிருக்கிரு.ர்கள் ; இல்லையானுல் இவ்வாறு இவர் கேட்டியார் ; நம்மைத் தவிர வேறு எவரையும் தீண்டி அறியாத ஆண்டகை என்று எண்ணியல்லவா இதுவரை ஏமாந்திருந்தேன்; என் எண்ணம்மண்ணுய்ப்போனது; ம்றுமுகம் பாராத உத்தமர் என உரைகள் பல பிதற்றி என்னை வஞ்சித்து வந்திருக்கும் வனப்புத்தான் என்னே இவர் ஒழுங்கு இன்று வெளிப்பட்டது , இப்படியா சங்கதி ! ‘ என இவ்வண் ணம் பற்பல எண்ணி வெப்பம் மிகுந்து வெய்துயிர்த்து விம்மி ஞள். இந்த உள்ளக் கிடைக்கைகளெல்லாம் : அயிர்த்துஉயிர்ச் தாள்’ என்ற சொல்லால் உணர்த்தியிருக்கும் கவியின் சித்திரம் விசித்திரமாக உள்ளது. அயிர்த்தல்=சந்தேகித்தல். இந்த ஐயுறவே அகநிலை கிரிந்து வெய்துயிர்க்கமைக்குக் காரணம் ஆத லால் முந்துற வந்தது. அயிர்ப்பிலும் உயிர்ப்பிலும் அனல் தழுவி யுள்ளமையால் அவற்றின் கொடுமையும் கொதிப்பும் உண ாலாகும்.

(கள்ளம் யாதும் இல்லாமல் உள்ளபடியே இயல்பாக யார்?

என்று அவன் கேட்டதை இவள் இவ்வாறு மாருக எண்ணிக்

47