பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 445

போழும் மன்னர் மரபில் பிறந்த யான் இன்னவாறு ஈனமா யிருந்து உயிர் வாழ்வேனே என அம்மான விான் கூறியிருக்கும் மாட்சியை இதில் ஊன்றி நோக்குக.

மானத்திலும் விாக்கிலும் தமிழ் வேந்தர்கள் முன்னம் என்ன நிலையில் இங்கே இருந்திருக்கின்றனர் என்பதை இவற் முல் சிறிது அறிந்துகொள்ளலாம். ஞானக் கால் அன்றி மானத் கால் போரில் விடினர்க்கும் விடு உண்டு என்றது என்ன ? எ னின், அது ஆண்டகைமை வாய்ந்த அரிய செயல் ஆதலால் அதற்கு ஒர் இனிய பயனை ஆண்டவன் உரிமை செய்துள்ளான் என்க. அந்தப் பயன் இல்லையாயின் வியப்பண்பு மக்களிடம் மாண்புடன் விளேந்து வருதல் அரிதாம். செத்தாலும் மோட்சம் கிடைக்கும் என்று எண்ணும்பொழுது ஒருவனுக்கு எவ்வளவு உற்சாகம் உண்டாகும் ?

“ நோற்றாேர் மன்றங்ண் பகைவர் கின்னெடு

மாற்றார் என்னும் பெயர் பெற்று ஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே. ‘ (புறம் 26)

இது, நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனை நோக்கி மாங்குடிகிழார் பாடியது. அாசர் .ெ பரும ! . . கின்னேடு எதிர்த்த பகைவர் ஈண்டு அமரில் ஆற்றாது மாண்டுபடினும் ஆண்டுத்துறக்க இன்பத்தைப் பெற்றுச் சிறப்புற்று வாழ்வார் ஆதலால் அவர் தவம் செய்தவரே யாவர் ‘ என இதில் உாைக்கிருக்கலறிக. நோற்றல்=தவம் புரிதல்.

“ கோற்றாேர் மன்ற தாமே கூற்றம்

கோளுற விளியார் பிறர்கொள விளிங்தோர் (அகம் 61)

இது, மாமூலனுர் பாடியது. முப்புப் பிணிகளால் இறவா மல் போர்க்களத்தில் எதிரிகளால் இறந்தவர் துறக்கம் பெறுத லின் அவர் கவக்க பாயினர் என இதுவும் குறித்துள்ளமை காண்க. கூற்றம் கொள விளியார் ; பிறர்கொள விளிக்கார் ;

ஆகலின் நோற்றேர் என்ற கல்ை பயனுடைய சாவின் நயனறிய லாகும். இறப்பினும் பயனுற இறக்க என்பது கருத்து.