உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3790 கம்பன் கலை நிலை எனது உக்கிர விர பராக்கிரமங்களை ஒரு சிறிதும் உணரr மல் பகைவகையினரை வறிதே புகழ்ந்து கூறினப் எனப் பாட் டனே இகழ்ந்து பேசிவிட்டு அவையிலிருந்து அவன் எழுந்து போ யினன். சபை கலைந்தது; மந்திரிகள் முதலிய அனைவரும பிரிந்து சென்றனர். முதியவர் சிலர் விளைவினை நினைந்து கவன்றிருந்தனர். அன்றைய இரவு அமைதியாய்க் கழிந்தது. உதயம் ஆயது. இன்ன தோர் தன்மைத் தாமென்று எட்டியும் பார்க்க அஞ்சிப் பொன்மதிற் புறத்து நாளும் போகின்ருன் போர்மேல்கொண்டு மன்னவர்க்கு அரசன் வந்தான் வலியமால் என்று தானும் தொன்னகர் காண்பான் போலக்கதிரவன் தோற்றம் செய்தான். g" அன்று சூரியன் உதித்ததைக் கவி இவ்வாறு வருணித் திருக்கிரு.ர். பருவ கால வரவு உரிய விளைவை உணர்த்தியுள்ளது. இலங்காபுரியை எட்டிப் பார்க்கவும் அஞ்சி என்றும் அய லே ஒதுங்கிப் பணிவோடு சஞ்சரித்து வந்த சூரியன் அன்று விரியமாய் நேரே அந்நகரைக் கானவந்தவன் போல் களிப்புடன் ஒளிவிசி எழுந்தான். கதை நிகழ்ச்சியோடு பொருக்திக் காலக் குறிப்பைக் காட்டி வருவது சுவையை ஊட்டிவருகிறது. இராம பிரான் வந்திருக்கிருர், அரக்கர்பதி அழிந்து படுவான் என்று துணிந்து இலங்கையைப் பார்க்க விழைந்து ஆதவன் வந்தான் என்றது மேலே விளைவதை உணர்ந்து கொள்ள வந்தது. மன்னவர்க்கு அரசன் என்று இராமனே இங்கே இன்ன வாறு குறித்திருக்கிரு.ர். தீயவர்களை அழித்து நீக்கி நல்லவர் களைக் காத்தருளுவது உலகபரிபாலனை அரசர் பெருமானுக்குத் தலை சிறந்த கடமையாம். அந்தக் குலதருமத்தைச் செய்ய மூண்டு இந்தச் சக்கரவர்த்தித்திருமகன் ஈண்டு வந்திருக்கிருன் ஆதலால் அவ்வரவு முறையைப் பெயரின் இயல்பால் நயமாகத் தெரியவுரைத்தார். மன்னர்பிரான் வரவு உன்னியுணர வந்தது. அதிசயவீரன் வந்துள்ளான் என்னும் மகிழ்ச்சியினல் கதிர வன் உதயமாயினன் என்ற தல்ை அன்றுமுதல் உலகில் துன்ப இருள் நீங்கி இன்ப ஒளி ஒங்க நேர்ந்தது என்பது உணர்த்தப் பட்டது. உணர்வு நிலை உவகை நிலையமாய் ஒளி புரிந்துள்ளது.