உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3844 கம்பன் கலை நிலை ல்கள்.இராமடசரிதத்தை உவந்து புகழ்ந்து வந்திருத்தலை இடங்கள் தோறும் உணர்ந்து மகிழ்ந்து வருகின்ருேம். உத்தமமான சுத்த விரனுடைய சரித்திரம் ஆதலால் உலகம் எவ்வழியும் இதனை விழைந்து வியந்து புகழ்ந்து மகிழ்ந்துள்ளது. நாடிழந்து காடு புகுந்தும் தன் விரப்பாட்டால் இராமன் பீடு பெற்றிருப்பது பெரு மகிமையாய் நீடியுள்ளது. பாட வல் லவர் யாவரும் இந்த ஆடவர் திலகனே ஆர்வம் மீதுார்ந்து பாட நேர்ந்தனர். மாமுது தாதை ஏவலின் ஊர்துறந்து கானுறை வாழ்க்கையில் கலந்த இராமன் மாஅ இரலே வேட்டம் போகித் தலைமகட் பிரிந்த தனிமையன் தனது 5. சுற்றமும் சேணிடை யதுவே முற்றியது கஞ்சுகறை படுத்த புன்மிடற்று இறைவன் உலகுபொதி உருவமொடு தொகை.இத் தலைநாள் வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி வன்தோள் ஆண்டகை யூரே யன்றே 10. சொன்முறை மறந்தனம் வாழி வில்லும் உண்டவற்கு அந்நாள் ஆங்கே மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும் நீலக்குவளே கிறனும் பாழ்பட இலங்கை அகழி மூன்றும் அரக்கியர் 15. கருங்கால் நெடுமழைக் கண்ணும் விளிம்பழிந்து பெருகுர்ே உகுத்தன மாதோ அதுஅக் குரங்கு தொழில் ஆண்ட இராமன் அலங்குதட ருெள்வாள் அகன்ற ஞான்றே. (ஆசிரியமாலை) இந்தப் பாசுரத்தில் பொதிக் துள்ள பொருள் நிலைகளைக் கருதிக் காணுங்கள். உள்ளம் ஊன்றி நோக்கிய அளவு கருத் துக்கள் தெளிவாய்க் கோன்றி வருகின்றன. ஆகவே குறிக் கோளோடு சூழ்ந்து ஆழ்ந்து நோக்குதல் தேர்ந்த கல்வியாம்.