பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4063 அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்; அதிரு மேகத் துருவின் அருகிழல்; ரிேல் குமிழி, ர்ேமேல் எழுத்து; கண்துயில் கனவில் கண்ட காட்சி அதனினும் பொல்லா மாயக் களங்கம் அமையும் அமையும் பிரானே அமையும்" (பட்டினத்தார்) நீரில் குமிழியாய் நீர்மேல் எழுத்தாப் பாரில் விரைந்து மாய்ந்து மறைந்துபோகிற இந்த ஊன வாழ்வை மறந்து ஞான மடைந்து தெளிந்து உய்யுநாள் என்ருே? என்று தாயுமானவரும் பட்டினத்தாரும் ப. மனே நோக்கி இவ்வாறு ப ரிங் து மறுகி இரங்கியிருக்கின்றனர். (அரிய துறவிகளும் பெரியஞானிகளும் இங்கனம் உணர்த்து தெளிந்துள்ள கிலேமையைக் கும்பகருணன் இங்கே தலைமையா உணர்த்தியிருக்கிருன். உரையால் அவன் உள்ளம் தெரிகின்றது. அழிந்து ஒழிக் து போகின்ற நிலையற்ற இந்த உலகவாழ்வை ஒரு பொருளாக விரும்பி கின்று நான் நிலை குலைந்து வாழேன் எனத் தனது தலைமைத் தன்மையைத் தம்பியிடம் வலியுறுத்தி யிருப்பது அவனுடைய மானவிரங்களையும் ஞான நீர்மைகளையும் மன வுஅறுதியையும் நன்கு துலக்கி நிற்கின்றது. எவ்வளவு நாள் இருந்தாலும் ஒருநாள் அழிந்து போக வேண்டியதே; அவ்வாறு அழிவு நிலையில் உள்ள வாழ்வை என் அறும் அழியாக புகழுக்கு உரிமையாக்க வேண்டும் எ ன் று மூண்டு நிற்கின்ருன் ஆதலால் கீர்க்கோலம் என அவ் வாழ்வின் நிலைமையை விழி தெரிய விளக்கினன். மின்னல் ஒளி, வானவில், பனிநீர் என நிலையாமைக்குரிய உவமைகளுள் வேறு எதையும் கூருமல் நீரின் கோலத்தைக்

  • h ாரில் நேரே தோன் வம் எளி ~! குறித்தது அது பாரில் கேரே தோன்றும் எளிமை கருதி...)

“Like the dew on the mountain, Like the foam on the river, Like the bubble on the fountain, Thou art gone, and for ever!” (Scott)