பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4070 கம்பன் கலை நிலை ஆலம்கண்டு அஞ்சி ஒடும் அமரர்போல் அரிகள் ஒட. தான் போரில் மூண்டு புகுந்தபொழுது ஆண்டு நிகழும் அவலக் காட்சியை இங்கனம் வரைந்து காட்டினன். பண்டு முண்டி எழுந்த ஆலகால விடத்தைக் கண்டு தேவர்கள் சிதறி ஒடியதுபோல் தன்னைக் கண்டு வானா சேனைகள் மானமழிந்து உள்ளம் கலங்கித் திசைகள் தோறும் ஒடியும் ஒழியும் என்று கும்பகருணன் உறுதியாகக் கருதியிருக்கிருன்; அந்தக் கருத்தை இந்த உரையால் உணர்ந்து கொள்ளுகிருேம். போராட மூண்டுவந்துள்ள படைகள் மீண்டு புறங்காட்டி அஞ்சி ஒடும் கிலேயைத் தெளிவுபடுத்தப் பண்டு நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு காட்டினன்.-அச்சத்தின் எல்லைதெரிய ஆலத்தைக் குறித்தான். ஆலகாலம் என்னும் கொடிய விடம் எவரை யும் எளிதே கொல்லும் ஆதலால் அதனேடு தன்னை நேர் நிறுத்திக் கொலைகள்விழும் நிலைமையைத் தலைமையாக உணர்ந்து கொள்ள உரைத்தான். அரிகள் = குரங்குகள்.) தேவர் யாவரையும் வென்று தொலைத்து மேன்மை எய்தி வாழ்ந்து வருகிற கன் குலத்தோடு போராட வந்த குரங்குக் குலத்தை அடியோடு தொலைத்து ஒழிப்பேன் எனத் தனது பேராற்றலையும் போராற்றலையும் நேரே துவக்கி கின்ருன். தன்னுடைய உள்ளத் துணிவையும் உ அறுதிக் திறலையும் தம்பி உணர்ந்து திரும்பும் படி உரையாடி யுள்ளான். எதிரியை வணங்கி வாழ யாகழ் இனங்கேன் என்பதை இந்தவாறு விர மொழிகளால் கீரமாய் விளக்கியருளினன். 'உயிர்சுமங் து உலகில் ஒருவரும் திரிய ஒட்டேன். போருக்கு வந்த யாவரும் உயிரோடு மீள மு. டி ய ா அது; அமர்க் களத்தில் அனைவரும் அழிக்கே படுவர் என்பதை இங்ங்

னம் தெளிந்து கொள்ள பொழிந்து கின்ருன்)

گی-- H

ன்னுடைய உக்கிர வீரத் திறலில் எவ்வளவு னிவும் தெளிவும் கொண்டிருந்தால் இவ்வளவு மொழிகள் .ெ வ ளி வரும்! முன்னம் சென்ற இடங்களில் எல்லாம் வென்றியே கண்டு வந்தவன் ஆதலால் அந்த வெற்றிக் களிப்பில் விஅமண் டிப் பேசியுள்ளான். சுக்கிரீவன் முதலாகச் சேனைக் கலைவர்