பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7- இ ரா ம ன் 407 || எவரையுமே ஒரு பொருளாக எண்னவே இல்லை. எல்லாரையும் திரனமாகவே கருதி யிருக்கலால் இவனது போர் வெறியின் நிலை தெரிய வந்தது. அடலாண்மை புரிந்து படைகளைப் பாழ் படுத்தி விடலாம் என்று திடமாகவே தீர்மானித்திருக்கிருன். தனது உள்ளம் துணிந்துள்ளதைக் கம்பியிடம் கேரே உரைக ளால் உணர்த்தி நின்றது உறுதி நிலையை வெளிப்படுத்தியுளது. இருவரும் கிற்க. என்றது வரையறை செய்து கூறியபடியாம். இராமனையும் இலட்சுமணனையும்முடிவாக வெல்லமுடியாது என்று இவன் முடிவு செய்துள்ளான். அந்த உண்மையை இந்த உரை உர்ைத்தி நின்றது. கருவரை, கனகக்குன்றம் என்ற து அவ் வீரர் இருவருடைய உருவநிலைகளே முறையே நினைக்து வக் தது. யாருக்கும் அசையாக அதிசய நிலையினர் என்பதை வரை என்னும் குறிப்பால் வரை ந்து கூறினன். கருவரை கனகவரை ஆகிய அக்க இருவர் கவிர வேறு எவ ரையும் உயிரோடு திரியவிடேன் என்றது எல்லாரையும் ஒருங்கே கொன் று தொலைப்பேன் என்றபடியாம். பகைப் படைகளே இவ்வாறு நாசம்செய்யவே நான் இங்கு மூண்டுவந்துள்ளேன்; என்.ஆன நேசம் கொண்டாடிச் சமாதானம் செய்ய வேண்டாம் என்று கம்பியை வேண்டி கின்ருன். கன்ைைடய உள்ளக் கிடக்கையை இங்ங்னம் உரைத்தவன் பின்பு தத்துவ நோக்கோடு சில புத்திமதிகளையும் கூறினன். ஆகுவது ஆகும்: போகுவது போற்றினும் போதல் செய்யும். இவ்வாறு இறுதியில் போகனே செய்துள்ளான். கால நியதியின்படி யாவும் நடக்கின்றன. ஆவதும் அழி வதும் எவருடைய விருப்பு வெறுப்புகளையும் எதிர்நோக்கி நிகழ் வன அல்ல. இயற்கை நியமங்களை எவரும் தடுக்க முடியா. ஆவாரை அழிப்பாரும் இலர்; ,பிழைப்பிப்பாரும் இலர் ת, כששJ/TגMro-לא