பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4074 கம்பன் கலை நிலை கான் இறந்து போவேன் என்று எனக்காக இரங்கி வருங் காதே என்று இளையவன் தெளிந்து மீளும்படி இவ்வாறு தெளிவு கூறியுள்ளான். பன்மையில் கூறியது பெரிய அண்ணனையும் குலத்தையும் ஒருங்கே கழுவி வக்கது. சாவதும் வாழ்வதும் அவ ாவருடைய தலை விதியின்படி முன்னமே முடிந்துள்ளன. அவற்றை கினைந்து அவலமாய்க் கவலையுறுவது மதிமானை உனக்குத் தகாது என அதி விசயமாய் நேரே அறிவுறுத்தினன். வருந்தல் செய்யாது ஏகுதி. என்றகளுல் வீடணன் அங்கே தமையனுக்காக வருந்தி கின்ற நிலை தெரிந்து கொள்ள வந்தது. தன்னுடைய அழிவு கிலேக்கு இரங்கி உழுவலன்போடு வந்து அவன் உருகி மறுகி கிற்கும் கிலை இவனுடைய உள்ளத்தைப் பெரிதும் உருக்கியுள் ளது. அவ்வுண்மையை உரைகள்தோறும் உணர்ந்து வருகிருேம். அன்பு சுரந்து இவ்வாறு அலமாலடைந்து கின்ற கும்பகரு ணன் பின்பு கம்பியை மார்போடு அனைத்து இறுகத் தழுவிக் கொண்டு முகத்தைக் கூர்ந்து நோக்கிக் கண்ணிர் சொரிந்து நின் முன். விரைந்து இறந்து படுவோம்; பிறந்த உரிமையோடு சிறந்து கூடியிருக்க இந்தத் துணைவனை இனிமேல் காண முடியாது என்ற பிரிவாற்ருமையும் பரிவும் உள்ளத்தைப் பெரிதும் உருக்கி கின்றமையால் கண்களிலிருந்து நீர் பெருகி ஒட நேர்ந்தது. கின்று கின்று இரங்கி ஏங்கி கிறைகல்ை கெடிது நோக்கி. வீடணனைத் தழுவிக் கொண்டு கும்பகருணன் கின்ற நிலை யை இகளுல் நேரே கண்டு நெஞ்சம் இரங்குகின்ருேம். மான வீரங்களால் யாதும் தளராத உறுதியுடையவன யிருந்தாலும் பிறவிப் பாசம் பெரிதும் கலக்கியுள்ளது. நேர்க் அதுள்ள இறுதி நிலைகளை கினைந்து நெஞ்சம் பரிந்து நெடுங் கவலை பாப் நீண்டு கின்றது. கடுங் தயரங்கள் கதுவி நின்றன. = * = இன்ருேடு தவிர்ந்ததே உடன் பிறப்பு என்று இரங்கி ஏங்கி யிருக்கலால் இவ் வீரனுடைய உள்ளத்தில் ஓங்கியுள்ள உரிமைப் பாசங்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். அருந்திறலாண் மையும் ஆர்வ கலங்களும் பெருக்ககைமைகளும் கிறைந்து கிகழ்கின்றன. பிறவிப் பாசங்கள் சுரந்து சுழல்கின்றன.