பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4076 கம்பன் கலை நிலை கண்ணும் வதனமும் மனமும் வாயும் உணங்கின்ை: உயிரோடு யாக்கை ஒடுங்கின்ை. என்றகளுல் அன்று அவன் அங்கே கின்று மறுகி கெடி , உருகியிருக்கும் நிலைமைகள் தெரியலாகும். உடன்பிறந்த துணை வன் போரில் மூண்டு விரைந்து இறந்து போவான் என்ற பரிதாப இர க்கம் அவனைப் பதைக்கச் செய்துள்ளது.) மேலும் மறுகி வேண்டுவதால் யாதும் பயன்படாது என்று உறுதியாகக் தெரிந்து கொண்டமையால் உள்ளக் கவலையோடு அண்ணன் முகத்தை நோக்கி விட்டுக் கண்ணிரும் கம்பலையுமாய் மீண்டான். சேனைக் கடல் எல்லாம் கரங்கள் கூப்ப என்ற கல்ை விட ணன் மீண்டு போன போது அரக்கர் படைக்குலம் முழுதும் அவனைத் தொழுது மரியாதை செய்திருக்கும் காட்சியை நேரே கண்டு மகிழ்கின்ருேம். அயலே விலகி நின்ருலும் அரச குடும் பத்தவன் ஆதலால் அம் மரபினர் அவனிடம் மதிப்பும் மாண்பும் புரிந்து வருகின்றனர்; அவ்வரவு நிலை இங்கே தெரிய வந்தது. தன்ஜன உரிமையோடு அழைக்க வந்த கம்பி உள்ளம் நொந்து போகலை நோக்கி நோக்கிக் கும்பகருணன் குலைதடித்து நின்ருன். நல்லவன்; தாய நீதிமான்; தியவர்களுடைய தொ டர்பு நீங்கி உய்ந்தான்' என்று உணர்ந்து உருகிப் பரிவு மீதார் ந்து தனக்குள்ளேயே மறுகித் தளர்ந்து பேசினன். உள்ளம் உருகி உரைத்தது. கள்ளநீர் வாழ்க்கையேமைக் கைவிட்டுக் காலும் விட்டான் பிள்ளேமை துறந்தான் என்னப் பேதுஅ கிலேயன். டதன்பால் அன்பால் வந்து பெயர்ந்து போகும் கம்பியைக் குறித்துக் கும்பகருணன் இப்படிக் கருதி யிருக்கிருன். மாய வஞ்சனைகளையே புரியும் தீய குழு என அரக்கர்குலத்தை அவன் கருதியிருத்தலால் கள்ளநீர் வர்ழ்க்கையேம் எனத் தன்னையும் சேர்த்துப் பன்மை மொழியில் இன்னலோடு குறித்தான். (பெரிய மகான்களைப்போல் பேரறிவுடையனப் உண்மை நிலைகளை - உறுதியாக உணர்ந்து கொண்டமையால் பிறப்பின் சிறுமை இங்கி மேலான சிறப்பினை அடைந்தான் என்பான் பிள்ளைமை துறந்தான் என்ருன். இதல்ை அவன் உள்ளம் தெரிய வந்தது.