பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.088 கம்பன் கலை நிலை இரக்கமற்ற கொடுமையும் பாவத்தீமையும் உடையவரா யினும் போரில் திரமாய் இறந்து பட்டமையால் அரக்கர் வீர சுவர்க்கத்தை மேவினர் என இவ்வாறு கூறியிருக்கிருர். அமரில் மாண்ட அரக்கர் துறக்கத்தை அடைந்து திவ்விய உருவம் எ ப் தினர்; ஆகவே அவரை /5/7ש־Lת לביי/TליF விழைந்து அரம்பையர் தழுவி மகிழ்ந்தனர்; அந்த அதிசய நிலை இங்கனம் துதி செய்யவந்தது. இலக்குவனுடைய பானங்களால் அடிபட்டு மாண்டவர் மண்ணுலக வாழ்வை இழந்து விண்ணுலகை அடைந்தனர் என் றது புண்ணிய நிலையுடன் வீரக் காட்சியையும் விளக்கி நின்றது. இந்தச் சுத்த வீரனைச் சூழ்ந்து மொய்த்து மூண்டு பொருத சேனைத்திரள்கள் செத்து விழவே அயலே எஞ்சி நின்றவர் அஞ்சி ஒடினர். அச்சம் அறியாத அரக்கர் அலமந்து ஒடியது அவலமாய் நின்றது. கன் படைகள் அழிக் து படுவதையும் உடைந்து ஒடுவதையும் கண்டு கும்ப கருணன் உள்ளம் கனன் முன். தனது சேனைக்கு இழிவு நேர்க்கதை நினைந்து மானத்தால் புழுங்கினும் இலக்குவனுடைய போராடலையும் விரத்திறலையும் நோக்கி ஆர்வம் கூர்ந்து புகழ்ந்து வியந்தான் ■ - செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த வரிவில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான் திரிபுரம் செற்ற தேவனும் இவனுமே செருவில் ஒருவிலாளர் என்று ஆயிரக் கால் எடுத் துரைத்தான். படர்நெடுங் கடந்தட்டிடைத் திசைதொறும் பாகர் கடவுகின்றது காற்றினும் மனத்தினும் கடியது அடல்வயங்கொள் வெஞ்சியம் கின்று ஆர்க்கின்றது = அம்பொன் வடபெருங்கிரி போல்வதேர் ஒட்டினன் வந்தான். (2) இலக்குவனது அதிசய ஆண்மைகளை வியந்து புகழ்ந்து தனது தேரை விரைந்து கடாவி நேரே கும்ப கருணன் மூண்டு வந்திருக்கும் காட்சிகளை இவை காட்டி நிற்கின்றன. தன் படைகளை அழித்துள்ள எதிரியை அவன் உள்ளம் உவந்து புகழ்ந்திருப்பது பெரிதும் வியப்பாயுள்ளது. போர் முகத்தில விரப் பிரதாபங்க்ளைக் கண்டபொழுது உண்மையான வீரர்கள். பகைமையையும்மறந்து எதிரியைப் புகழ்ந்துெ காள்ளுகின்றனர்.