பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,092 கம்பன் கலை நிலை துகிறேன்; நீ நல்ல விரன் ஆனல் அதனைத் தடுத்து கில் என்று வீர வாதம் கூறினன். கும் பகருணன் இவ்வாறு ஆரவாரமாய் அடலாண்மை காட்டிப் பேசவே இலக்குவன் சிறுநகைசெய்து மறுமொழி சொல்லினன்; அது பெருமிகநிலையாய்ப் பெருகியது. வில்லினல் சொல்லின் அல்லது, சொல்லினல் சொலக் கற்றிலம். இலக்குவன் சொன்ன பதில் மொழி யிது. வாயால் விணுகப் பேச எ னக்குத் தெரியாது; என் வில்லி ஞலேயே உனக்கு நான் பதில் சொல்லுகிறேன் என்று இளைய வன் சொல்லியுள்ள இதில் இவனது உள்ளத் துணிவும் உறுதி கிலேயும் உரையாடுக்திறனும் வெளியா யுள்ளன. | அல்லினல் செய்த நிறத்தவன் எனக் கும்ப கருணனையும், மல்லினல் செய்த தோளினன் என இலக்குவனையும் கவி வடித் துக் காட்டியிருக்கிரு.ர். படித்துப் பார்த்த அளவில் இக் காட்சி யை விடுத்துப் போகாமல் அடுத்து மடுத்து நுனித்து நோக்க வேண்டும். நேர்ந்த இருவரது நிலைகளும் கூர்ந்து உணர வந்தன. கரிய பெரிய உருவமுடைய அவனும் அரிய திறலுடைய இவலும் நேரே போர் புரிய மூண்டது அதிசயமான ஒரு விர விளையாடலாய் நீண்டு நிலவியது. பழம் பகைமையை அவன் உளம் துணிந்து கிளர்ந்து கூறியது கினைந்து சிந்திக்க வுரியது. உன் அண்ணியை என் அண்ணன் எடுத்து வந்தான் என்று உன்.அண்ணனும் நீயும்படைகளோடு கடுத்து வந்து கொடும்பழி கூறி அடுக்தொழில் புரிய ஆர்த்து நிற்கின்றீர்; விேர் செய்துள்ள பெரும் பிழையை நினைந்து சிந்திக்கவில்லை; அதனை நன்கு சிந்தனை செய்க என்று கிந்திக்கும் முறையில் சூர்ப்பநகையின் அங்கபங் கத்தைக் குறித்துக் கும்ப கருணன் இங்கே பேசி யிருக்கிருன். பெய்தவத்தின் ஒர் பெண் கொடி எனத் தன் தங்கையை இங்ஙனம் புகழ்ந்து கூறியுள்ளான். மூன்று ஆண் பிள்ளைக ளோடு ஒரு பெண் பிள்ளை அருமையாக அரச குடியில் பிறந்தி ருக்கிருள் என்பான் இப்படிப் புனைந்து கூறினன். பிறப்புரிமை யில் அன்பும் ஆர்வமும் பெருகியுள்ளமையை இவ் வுரை சிறப் பாக விளக்கியுள்ளது. தன் குலத்திலும் குடியிலும் உறவிலும்