பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3970 கம்பன் கலை நிலை மகா வீரன் என்று இறுமாந்திருக்க நானும் நாயாகவே காணப் படுவேன். பாட்டா இனி மேலும் மேலும் விரித்துப் பேசுவா னேன்?. இந்திரன் முதலிய தேவர்களாலும் முதன்மையான மூவர்களாலும் இலங்கை வேந்தன் மாய்ந்தான் என்று காய்ந்த பழி நேராமல் ஒர் அதிசய விரளுேடு போராடி நேரே மாண் டான் என்னும்படி புகழ் வாய்ந்துள்ளதை நினைக்து ஆறுதலுறு கின்றேன். என் குலக்கோடு கான் நாசம் அடைய நேர்ந்தா அம் நல்ல ஒரு சுத்த வீரனை எதிரியாகப் பெற்ருேமே! என்று என் உள்ளம் உவந்துள்ளது. இன்று போய் நான் போரில் கண்டு வந்த முடிவு இதுதான்' என்று முடிவாகச் சொல்லி முடித்தான். அவனுடைய சொல்லில் சோக வீரங்கள் தோய்ந்து

  • W

வேக வீறுகள் விரிந்து நின்றன. ) == ஈண்டு முடிந்துள்ள முடிவுகளைக் கூர்ந்து நோக்கி ஒர்ந்து சிக்கிக்கின்ருேம். உரைகள் உள்ள நிலையைக் கள்ளமின்றிக் காட்டியுள்ளன. கருத்துக்கள் கருதி யுணரவுரியன. டயாதும் ஒளியாமல் கன் உள்ளத்தைத் திறந்து இராவணன் கேர்மையோடு பேசியிருக்கிருன். பகைவன் என்பதை அறவே மறக்கு எதிரியை வியந்து புகழ்ந்திருப்பது அவனுடைய உயர்ந்த பெருக்ககைமையை உணர்த்தி நிற்கின்றது.) வீரரை வீரரே வியப்பர் என்னும் பழமொழியின்பொருள் இங்கே கிழமையோடு விளங்கியுள்ளது.) மொழிகள் தோறும் உணர்ச்சிகள் பொங்கி வந்திருக்கின்றன. மானச மருமங்கள் மருவி மிளிர்கின்றன. போரில் கேரே கண்டு அனுபவித்த காட்சிகள் எல்லாம் அவன் கண் எதிரே கொன்றி யுள்ளன. அந்த உண்மைகளைப் பாட்டன்பால் தெளிவாக உரைத்திருக்கிருன். - கூனி கூன் போக உண்டை தெறித்தபோது ஒத்தது அன்றிச் சினஉண்மை தெரிந்ததில்லை; படைகள் பலமாண்டு பல்லாயிரம் கொலைகள் விழும்படி உக்கிர விர மாயப் உருத்துப் போர ாடிய போர்முகத்தில் இராமன் திருமுகம் இருந்த நிலையை இது ஒருமுகமாய் எழுதிக் காட்டி யுள்ளது.' இந்தக் காட்சி அரிய சிந்தனைகளுடையது. மந்தரை என்பவள் கைகேசியின் அரண்மனையில் இருந் கவள். முதுகில் ஒரு கூன் இருக்கமையால் அவள் கூனி என - பு