பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4, 109 போதியோ பின்றை வருதியோ அன்றெனின் போர்புரிந்து இப்போதே சாதியோ? உனக்கு உறுவது சொல்லுதி சமைவுறத் தெரிக்கம்மா!(1) இழைத்த தீவினே இற்றில காகலின் யானுனே இளேயோல்ை அழைத்த போதிலும் வங்கிலே அந்தகன் ஆனேயின் வழி நின்ருய்! பிழைத்த தாஇனக்கு அருந்திரு நாளொடு பெருங்துயில் நெடுங்காலம் :உழைத்து வீடுவ தாயினே என்னுனக்கு உறுவது ஒன்றுரை என்ருன். 1 _ _ போர்க்களத்தில் தனித்த நிற்கும் கும்பகருணனை நோக்கி இராமன் இப்படிப் பேசி யிருக்கிருன். நீதியும் இரக்கமும் பேச் சில் நிலவி நிற்கின்றன. வீரன் கருணையை வியந்து காண்கிருேம். 'கும்பகருளு! உனக்குத் துணையாய் வந்த படைகளையெல் லாம் இழந்தன; தனியே நிற்கின்ருய்! நீதிமானன விடணனேடு பிறந்தவன் ஆதலால் உன்னேக் கொன்று வீழ்த்த எனக்கு மனம் வரவில்லை; உன் உயிரை உனக்கே உரிமையாக அருளியுள்ளேன்; இங்கிருந்து இலங்கைக்குப் போப் விடுகின்ருயா? போப் உடம் பைத் தேற்றிக் கொண்டு மீண்டும் ஈண்டு போருக்கு வருகின் ருயா? அல்லது இப்பொழுதே போர் புரிந்து இங்கேயே செத் துப் போகின்ருயா? உன் கருத்து என்ன? உறுதியாகக் கருதுவ தை விரைந்து சொல் உன் கம்பியை முன்னமே அனுப்பி அன்பு டன் உன்னைச் சமாதானமாக அழைத்தேன்; நீ வர வில்லை; சாக நேர்ந்துள்ளமையால் உனக்கு யூக விவேகங்கள் நேராமல் போயின; உனது வாழ்வு பரிதாபமுடையது; என்றும் கன்ருய் உறங்கிக் கழித்தாய்! இன்று இப்படிவினே இறக்க நேர்ந்தாய்! உன்மேல் இரக்கம் மீதுார்ந்து என் உள்ளம் பரிவு கொண்டுள் ளது; நேரே பொருது சாகின்ருயா? அல்லது என்ைேடு சேர்ந்து வாழ்கின்ருயா? உன் விருப்பம் என்ன? உண்மையைத் தெளி வாகச் சொல்லிவிடு!’ என இன்னவாறு இவ்வில் வீரன் வினவி யிருக்கிருன். வீடணைேடு உடன்பிறந்த தமையன் என்ற அந்த உரிமை ஒன்றே இராமனுக்குப் பெரும் பரிவை நல்கியுள்ளது என்று தெரிகின்றது. உரிமையாளன் தொடர்பு உறவுமேயது. கின் உயிர் நினக்கு ஈவேன் என்றது இருவர் நிலையும் ஒருங் கே தெரிய வந்தது. கும்பகருணன் சாவின் வாயில் நிற்கிருன்; அவன் உயிர் இராமன் கையில் இருக்கிறது என்பதை ஈவேன் என்ற சொல் ஈண்டு நன்கு தெளிவாக்கி நயம் சுரந்து நின்றது.