பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.158 கம்பன் கலை நிலை திறந்து உப்ய வழியும் போதித்தாள். 'உனக்கு அழிவு காலம் நெருங்கி யுளது; மேலும் பழி மொழிகளைப் பகர்ந்து பாவம் படிந்து பாழாகாதே; வெளியே போய்விடு' என்று வெகுண்டு கூறினுள். தாயவள் உரை தீயவனுக்குத் தியாய் நேர்ந்தது. இராவணன் சீறி கின்றது. தான் அன்போடு பரிந்து பேசிப் பணிந்து வேண்டியும் தனது வேண்டு கோள்களை யாதும் மதியாமல் இகழ்ந்து வெறு த்துத் தன்னைச் சீதை ஏகமா இழித்துப் பழித்தது இலங்கைவே க்தனுக்குக் கொடிய கோபத்தை கெடிது மூட்டியது. கொன்று,கின் தலைகள் சிந்தி என்ற இந்த வாசகம் நெருப் பைக்காய்ச்சி வார்த்தது போல் அவன் செவியில் பாய்ந்தது. பாயவே அவன் ஆங்காரத்தோடு சீறி உருத்துக் கோரமாய் விறி ட்டு எழுந்தான். வெகுண்டு மொழிக்கான்: அறிவுகெட்ட பே தையே! உன்னேப் போல் முழுமூடமானவளை உலகத்தில் கண்டி லேன்; எனது மகிமையை ஒரு சிறிதும் உணராமல் வினவார்த் தைகளை வாய்த் துடுக்காப்ப் பேசினுப்! என்னை இராமன் வென் அறுவிடுவான்; பின்பு அவனேடு கூடிவாழலாம் என்று ே காடி யிருக்கிருப்; உன்னுடைய உள்ளப் போக்குகள் எள்ளி நகைக் கத்தக்கன. தேவரும் எனக்கு அஞ்சி ஏவல் செய்கின்றனர்; மூவுலகங்களிலுள்ள யாவரையும் நான் வென்றிருக்கிறேன்.அற்ப மனிதனை இராமனை எளிதே கொன்று தொலைத்துப் படைகளே யும் அடியோடு அழித்து விடுவேன்; வானாசேனேகளோடு வந் திருக்கிருன் என்று களித்திருக்கிருப் போலும்! யாவரை யும் அழித்து விட்டு அயோத்திக்கும் மிதிலைக்கும் போய் அங்குள்ள வரைப் பாழாக்கி முடித்துச் சனகனக் கையோடு கட்டிப் பிடி' த்து வரும்படி பெரிய அரக்கர் சேனைகளை அனுப்பியிருக்கிறேன். (நீ பிறக்க இடமும் புகுந்த இடமும் அடியோடு அழிந்து போ யின என்று அறிக் து கொள்! எனது நிலைமையையும் உணர்ந்து தெளிர்து கொள்! ' என இவ்வாறு ஆங்காரமாப்ப் பேசினன். அவனுடைய கோபக் கொதிப்புகள் காமதாபங்களைக் கடந்து கடுமையாய் வந்தன. சீதை திகிலடைந்து கடுங்கும்படி கொடிய சுடுமொழிகளைப் படுமோசமாய்க் கூறினன். சினமும் சீற்றமும் உரைகளில் ஒலித்து உக்கிர வீரமாய் ஓங்கி கின்றன.