பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4232 == கம்பன் கலை நிலை உணரவந்தன. காவலாய் கின்ற இளைய விரனுக்கு அஞ்சியே இராவணன் கள்ளம்புரிந்து வஞ்சிக்க நேர்ந்தான்.

சிலைஎடுத்து இளையவன் கிற்கச் சேர்ந்திலே! தலைஎடுத்து இன்னமும் மகளின் தாழ்தியோ? '

இலங்கைச் சிறையில் தன்னை நச்சிவனங்கிய இராவணனை நோக்கிச் சீதை இப்படி எள்ளி இகழ்ந்து சொல்லியிருக்கிருள். *இளையவன் இல்லாதபோது கள்வாய்வங்து கடுங்கேடுபுரிந்தாய்! அப்பிள்ளை இருக்கும்பொழுது நீ வந்திருந்தால் உன் உடலில் உயிர் இருக்குமா? மடையா! இதனை உணர்ந்து பார்!’ அப்பதிவிரதை பரிந்து கூறியிருப்பது இங்கே அறிந்து கொள்ள வுரியது. காவல் புரிந்ததும் பிரிந்ததும் கருதியுணர வந்தன. என அன்று சிலை எடுத்து என்ற கல்ை இளையபெருமாள் அங்கே வில் ஏந்தி நின்ற விர நிலைமையையும் வெற்றித்திறலையும் உய்த்துனர் ந்து கொள்ளலாம். அண்ணனும் அண்ணியும் இவ்விரக் கம்பியை எண்ணி மதித்திருக்கும் கண்ணியமும் ஆர்வமும் கண் எதிரே *R/7 னவந்துள்ளன. பாசவுரிமைகள் வாசகங்கள் தோறும் வாசம் புரிந்து வருவகை ஆசையோடு நோக்கி யாவரும் ஆனந்தம் அடைந்து அன்பு கலங்கள் சுரங்து பண்பு மிகுந்து வருகின்றனர். தனக்கு அவமானத்தை விளைத்த கொடியவன் நெடிய வலி யினன், தேவர்களையும் அடக்கியாள்பவன்; யாவரும் அஞ்சும் படியான அடலாண்மைகள் நிறைந்தவன்; கடலினும் பெரிய படைகளையுடையவன்; அவனேடு போராட நான் நேரே துணிந்து வந்திருப்பது எனது துணைவனுடைய துணிவினலே யாம் என இக்குலமகன் தெளிவாக விளக்கியிருக்கிருன். போரைக் கொடுவந்து புகுந்தது காம் ஆரைக் கொடு வந்தது? தன் கம்பியின் துணை ஒன்றை நம்பியே தான் இலங்கைமேல் படை எடுத்து வந்திருப்பதாக இங்கம்பி இங்கனம் உரைத்திருக் கிருன் இளையவனுடைய அதிசய ஆற்றல்களே இவ்வாறு பல வகையிலும் விளக்கி எ திரியோடு போருக்கு நேரே அனுப்ப நேர்ந்தான். வீரத்திறல்கள் மூண்டு'வி.டிகொண்டு நின்றன.