பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4238 கம்பன் கலை நிலை வென்றிவிருேடு விளங்கி கின்ருன். அங்கிலையில் மீண்டும் யானைப் படைகள் இலங்கையிலிருந்து அடல்கொண்டு மண்டிக் கடல் போல் மூண்டுவந்து இலக்குவனேச் சூழ்ந்து கொலைக்குறிப் போடு யாண்டும் கொதித்துப் போராடின. ஆடவே இவ்விர னது வில்லாடல் எல்லைகடந்து எழுந்தது. யாரும் சொல்லாட முடியாதபடி யாண்டும் யானைகள் மாண்டு மடிந்தன. ஒருகோடிய மதமால்கரி யுளவந்தன. உடன் முன் பொருகோடியில் உயிர் உக்கன ஒழியப் பொழிமதயாறு அருகோடுவ வரவுந்தினர் அசனிப்படி கணேகால் இருகோடுடை மழைவெஞ்சிலே இளவாளரி எதிரே. [1] உலகத்துள மலேஎத்தனே அவையத்தனே உடனே கொலகிற்பன பொருகிற்பன புடைசுற்றின குழுவாய் அலகற்றன. சினமுற்றிய அனல்ஒப்பன அவையும் தலையற்றன. கரமற்றன. தனிவில்தொழில் அதனல். (2) மீண்டும் மூண்டுவந்த யானைச்சேனைகள் நாசமாய் மாண்டு மடிந்துள்ள நிலைகளை இவை நன்கு காட்டியுள்ளன. அரக்க வீரர்கள் ஆரவாரமாய் ஆர்த்துச் செலுத்திவந்த மதகரிகள் யாவும் பிணமலைகளாய்ப் போர்க்களத்தில் இடங்கள்தோறும் குவிந்து தோன்றின. இளையபெருமாளுடைய வில்லின் வேலையைநோக்கி கிருதர்கள் எல்லாரும் உள்ளம் கலங்கி உளைந்து உயிர்மயங்கி கின்றனர். பொருகின்ற சிலையும், அதிலிருந்து பெருகி வருகின்ற பகழிகளும் யாண்டும் அதிசய நிலைகளாய் நீண்டு தோன்றின. இருகோடுடை மழைவெஞ்சிலை இளவாளரி என இலக்கு வனக் கவி இங்கே விளக்கியிருக்கும் வித்தகம் வியந்து நோக் கத்தக்கது. (கார்மேகம் மழையைப் பொழிவதுபோல் இவனது 1. கார்முகம் அங்கு அம்புகளை யாண்டும் பொழிந்துள்ள நிலைகளைத் தெளிந்துகொள்ளும்பொருட்டு மழைவெஞ்சிலை என்ருர் எண் னில் அடங்காதபடி விண்ணும் மண்ணும் வியந்து நோக்கவக்க யானைத்திரள்களை இந்த இளஞ்சிங்க ஏறு அழித்து ஒழித்தது என்பார் இளவாளரி என்ருர், இடம் செயல்களுக்கு ஏற்றவாறு பேர்சூட்டிப் போர்வீரனைப் போற்றி வருவது புதிய ஒளியை ஊட்டி வருகிறது. வீரத்திறல்கள் விசித்திர வியப்புகளை விளைத்து வருகின்றன. ஒரு வில்லால் பல்லாயிரம் மதகரிகள் பாழாயின,