பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4250 கம்பன் கலை நிலை இடம் சிறந்த வெற்றிகளே அடைந்து உயர்ந்து விளங்கும் என உறுதிசெய்யவே உவகை பெரிதும் பொங்கி நின்றது. பிறந்த இனம் தீமையுடையது என்று விரைந்து விலகிவந்தவன் ஆக லால் நல்ல இனத்தின் வெற்றியில் உள்ளம் களிக்க நேர்ந்தது. அதிகாயன் இங்கு அழிந்துபட்டது இனி இந்திரசித்து அழிவகை விழிகெரிய விளக்கிகின்றது என முழக்கி நின்ருன். நராங்தகன் மூண்டது. அதிகாயன் மாண்டு விழவே அரக்கர் சேனைகள் அவல மாப்க் கலக்கம் அடைந்தன. அதுபொழுது நாாந்தகன் என்னும் விரன் தேரை விரைந்து கடாவிப் போர்மேல் மூண்டு புகுந்தான். அதிகாயனுக்கு இவன் கம்பி முறையினன். இராவணனுடைய மனைவியர் பலருள் ஒருத்தியான காமதிலகை என்னும் வயிற்றில் பிறந்தவன். மனித இனத் துக்குக் கொடிய சத்துருவாய் யாண் டும் நெடிய துயரங்களை விளைத்து வந்தவன் ஆதலால் தராந்தகன் என விளங்கி நின்ருன். கன் அண்ணன் அழிந்துபட்டதை அறிக் ததும் ஆங்காத்தோடு கனன்று வந்தான். அங்கதன் இடையே பாய்ந்து அவனோடு எதிர்த்தான். இருவருக்கும் போர் மூண் டது. நெடும்போது கோவில்லை. தன்மேல் எ ப்த பகழிகளையெல் லாம் விரைந்து விலக்கித் தேர்மேல் பாய்ந்து வில்லைப்பறித்து விசி எறிந்து பல்லுடையக் குத்தினன். அவன் உடைவாளை உருவினன்; அதனே இடதுகையால் கட்டி ஒழித்து ஒட்டி மல் லாடி உருத்து அடிக்கான்; அவன் உயிர்போப் உருண்டு விழுங் தான்.அங்கதனது அடலாண்மையைவியங் துயாவரும் துதிசெய்து புகழ்ந்தார். தேவரும் அவனே ஆவலோடு நோக்கி நின்றனர். போர்மத்தன் புகுந்தது. ஈராந்தகன் மடிந்து விழவே போர்மத்தன் என்னும் சேனைத் தலைவன் தனது யானையைக் கடாவி அடலாண்மையோடு ஆர்க் அதுவந்தான். படைகள் புடைசூழக் கடல்போல ஆரவாரம்செய்து ஆங்காரத்தோடு புகுந்த அவனே நீலன் நேரே போப் எதிர்த்தான். களிப்பு மிகுந்த மதுவைக் குடித்துக் கனல்போல் மண்டி அவன் களித்துத் தெளித்து வருங்கால் வானர சேனைகள் மறுகி மயங்கி உறுதி குலைந்து பெரிதும் கலைந்து உலைந்து கின்றன.