பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4254 கம்பன் கலை நிலை எதிரே இறந்துபடு, நேரத்தை வினே கடத்தி நில்லாதே!’ என்று இடபன் இவ்வாறு சொல்லாடவே - அவன் ஒல்லையில் உருத்து வில்லாட நேர்ந்தான். பானங்களைக் கடுத்துத் தொடுத் தான். ஏவிய பகழிகளையெல்லாம்விலக்கி ஒழித்து நேரே பாய்ந்து அவனுடைய கேரை வாரி இடபன் விசி எறிந்தான். வானர விரன் செய்கதை நோக்கி வானவரும் வியந்தனர். தேரோடு போப்க் கடலில் வீழ்ந்தவன் விரைந்து எழுந்து மீண்டும் வந்து மூண்டு போராடினன். இவன் அடுத்து நின்று அடலாண்மை புரிக்கான். புரியவே குரங்கு என்று முன்னம் எளிதாக இகழ்ந்து பேசின. அவன் பின்பு இவனுடைய அடுக்கிறல்களை அறிந்து நெடுங்திகில் அடைக்கான். கடும்போர் புரிந்து வந்த இவன் ஒல் லையில் விரைந்து பற்றிப் பல்லுடையக் குத்தி மல்லாடி விழ்த்தி ன்ை. அவன் மாண்டு மடிந்து மண்மேல் விழுங்தான். அல் லினேத் தழுவிகின்ற பகல் என அரக்கன் தன்னேக் கல்லினும் வலிய தோளான் கட்டியிட் டிறுக்கும்காலைப் பல்லிடைப் பிலவா பூடும் பசும்பெருங் குருதி பாய வில்லுடை மேகம் என்ன விழுந்தனன் உயிர்விண்செல்ல. மல்லாடல் புரிந்து வயமத்தனே இடபன் கொன்று விழ்த்தி யிருப்பதை இது நன்கு காட்டியுள்ளது. வாய்வழி இரத்தம்பாய நிலைகுலைந்து அவன் மடிந்து வீழ்ந்திருத்தலால் இடபனுடைய உடல் வலியும் அடல் நிலையும் உணர வந்தன. சென்ற போர்களி லெல்லாம் வெறிகொண்டு பொருது பாண்டும் வென்று வந்த வன் ஈண்டு மாண்டு மடிந்திருப்பது யாவருக்கும் பெரிய வியப் பாயிருந்தது. அரக்கருக்கு அழிவுகாலம் எனத் தெளியநேர்ந்தது. கும்பன் கொதித்தது சிறந்த சேனைத் தலைவனை வயமத்தன் அழிந்து படவே குமடன் என்னும் வீரன் கொதித்து வந்து கொடுஞ்சமர் புரிந் தான். அரிய திறலுடைய அவன் நெடிய படைகளோடுபுகுந்து கொடிய போர்புரிந்து குரங்குப் படைகளைக் கொன் அறு வருவ கைக் கண்டதும் சுக்கிரீவன் வென்றி விருேடு விரைந்து எதிர்ந் தான். வெம்போர் மூண்டது. இருவரும் விருேடு நேர்ந்தனர். குரங்கினுக்கு அரசும் வென்றிக் கும்பனும் குறித்தவெம்போர் அரங்கினுக்கு அழகு செய்ய ஆயிரம் சாரி போக்தார்