பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4276 கம்பன் கலை நிலை அரக்கர் குழாங்களும், குரங்கினங்களும் கொதித்துப் போராடிக் கொலையுண்டு மாய்ந்துள்ள நிலைகளை இவை காட்டி யுள்ளன. பிணமலைகளும் இரத்த வெள்ளங்களும் இடங்கள் தோறும் நிறைந்து பெருகிப் போரின் வலிகளையும் கொலைகளின் நிலைகனையும் அளவுசெய்து நின்றன. எவ்வழியும் இழவுகள் ஏறவே சேனைத்தலைவர்கள் றிே ஏறினர். சுக்கிரீவன் அனுமான் அங்கதன் குமுதன் நீலன் முதலிய சேதிைபதிகள் யாவரும் ஆமைல் எறி அடுதொழில் ஆடினர். கிருதர்களில் தலைசிறந்த பெருவீரர்கள் எல்லாரும் பொங்கி மூண்டு பொருகனர். எங் கும் வெற்றிபெற்று வீறுகொண்டுவாழ்ந்துவக்க அரக்கர் அன்று அங்கே சீரழிந்து செத்து விழ்ந்தனரேயன்றிப் போரில் ஒன்றும் வெற்றிபெருது போயினர். கடல்போல் கொதித்துவந்த அப் படைகளையெல்லாம் வானரவீரர் உடல்வேறு உயிர்வேறு ஆக்கி அடலாண்மை புரிந்து ஆர்த்துவந்தது அதிசய வியப்பாய் கின் றது. ஒரு வானர வீரனல் பல கிருதர்கள் அழிந்துபட்டனர்; அப்பாடு அவரது அழிவுகால நிலையை விழிதெரிய விளக்கி நின் றது. என்றும் எங்கும் வென்றியாளராயப் விருதுபெற்று வந்த கிருதர் அன்று குரங்குகளோடு பொருது குலத்தோடு பொன்றி முடிந்தது நிலத்தோடு நேர்ந்த பெரிய அதிசயமாய் நிலவியது. இந்திரசித்து மூண்டது. தனது குலச்சேனைகள் கொடுமையாய் அழிந்துபடுவதைக் கண்டதும் இந்திர சித்து உள்ளம் கொதித்து உருத்துச் சினங்து தேரைக்கடாவிப் போருள் புகுந்தான். நேரெதிர்ந்து கின்றவர் எவரும் நிலைகுலைந்து அழியும்படி சிலை வளைந்தது. அவனுடைய வில்லிலிருந்து விடுபட்ட பானங்கள் வானரங்களை வதைத்து வீழ்த்தி வானகம் எங்கனும் ஒடி நீடின. பிடித்தது ஒருவில்; தொடுத்தது பலகணைகள்; அடுத்து அடர்ந்த கவிக்குலங்கள் துடித்து விழ்ந்து தள்ளி மடிந்தன. அவன் மூண்டு பொருத சிறிது நேரத்துள் பல்லாயிரக் கணக்கான் வானரங்கள் மாண்டு மடியவே வான வரும் நெஞ்சம் கலங்கி கெடிது மறுகினர். உற்ற படைகளை முற்றும் அழித்து வெற்றிபெற்ருன் எனக் கொற்றங்கள் குலாவி எங்கும் உறுதிகள் பொங்கி நின்றன.