பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4282 கம்பன் கலை நிலை ஆதலால் அந்தக் கருமத்தை இங்கனம் மருமமாக் குறித்து உரைத்தான். இகழ்ச்சிக் குறிப்பு இறப்பைக் காட்டி நின்றது. * கல்எடுப்பு; காடாற்று என்று சாவின் சடங்குகளைக்குறித்து இந்நாட்டில் வழங்கும் பழ மொழிகளையும் கேட்டுவருகிருேம். நீங்கள் யர்வரும் இறந்து, அரக்கர் குலம் முழுவதும் அடி யோடு நாசமாய்ப் போன பின்னர், இராவணன் முதலாக உங் கள் எல்லாருக்கும் எள்ளும் நீரும் இறைத்து இறுதிக் கடன் கழிக்க உரியவன் விபீடணனே. தன் கருமத்தைச்செய்ய அவன் இங்கே எங்களோடு உரிமையாயிருக்கிருன் என்பான் கல் எடுக்க உரியானும் கின்றனன் என்ருன். - (அந்தக் கல் எடுப்புக்கு அதிகநாள் செல்லாது; விரைவில் நடக்கும் என்பான் அது இன்று காளையிடை காணலாம் என் ருன். இரண்டு தினத்துள் உன் குலம் முழுவதும் அடியோடு அழிந்துபோகவுள்ளது; அந்த நாசநிலையில் நிற்கின்ற நீ யாதொரு யோசனையுமின்றி அவமே விம்பான வார்த்தைகளைப் பேசுகின் ருயே பேயா! என்று ஏசுகின்றபடியாப் இந்தக் கல் எடுப்பை இங்கே எடுத்துக்காட்டித் தன் சொல் எடுப்பைத் துலக்கினன். தான் வில் எடாமலும், கல் எடாமலும் வெறுங்கையோடே போராட வல்லவன் என்பதை அனுமான் இங்கே சொல்லாமல் சொல்லினன். வில் எடுத்து வராமையை இகழ்ச்சியா அவன் சுட்டிப் பேசினமையால் இங்கனம் சொல் எடுத்துப் புகழ்ச் சியா இவன் கட்டிப் பேசினன். பேச்சு பெருமிதமாய் வந்தது. இந்திராதி தேவர்கள் எல்லாரையும் வென்று நீ விர விருது பெற்றிருந்தாலும் இங்கே பொன்றி முடிதல் உறுதி; அந்த அம ரர்களைப்போல நாங்கள் அபலைகள் அல்ல; உங்களைக்குலத்தோடு எமலோகத்துக்கு அனுப்பவே யாம் இலங்கைக்கு வந்திருக்கின் ருேம். ஒரு சிறிய புல்லைக் கைக்கொண்டே பெரிய வில்லைக் கொண்டவரையும் வென்று கொலைப்போம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்னும் சொல்லை நீ உணர்ந்துகொள்ளவேண் டும். நான் வில் எ டாமலே எவரையும் வெல்லவங்துள்ளேன். 'என்னோடு போர்புரிகின்ருயா? அல்லது இளையபெருமா ளோடு நேர்கின்ருயா? அல்லது உன் தந்தையைக் கொன்.அ