பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,316 == கம்பன் கலை நிலை வென்றுவிடுவான் என்று உண்மையை உரிமையோடு உணர்த்தி யிருக்கிருன். அப்படி உரைத்தவன் யார்? இராவணற்கு இளவல். வீடணனை இப்படிச் சுட்டிக்காட்டி யிருக்கிரு.ர். இராவணனுடைய கலைமகனை ஒல்லையில் கொல்லும் படி அவன் கம்பியே எதிரியிடம் உளவு சொல்லினன் எனச் சொல்லியிருப்பது உள்ளி உணரவுரியது. உடன் பிறந்த உறவு நிலையை அறவே துறந்து புனித நிலையில் மறுபிறவி எடுத்திருப்ப வ&னப்போல் விடனன் உண்மையுணர்வுடன் . ஒளி மிகுந்துள் ளான் ஆகலால் புகல் புகுங்க இடத்தில் இனிது கலந்து தனி உரிமையோடு நடந்துவருகிருன். கக்கவன் உரை தகவாய்வந்தது. தன் அண்ணனது அருமை மகன் என்பதை ஒரு சிறிதும் எண்ணுமல் மருவிய இனத்தோடு ஒருமையாய் மருவியிருப்பது கருதியுணர வந்தது. அரிய மருமங்களைக் கெரிய விளக்கினன். விசும்பில் ஏகுமேல் வெல்வன். இந்திரசித்தை அங்கிருந்து கப்பவிட்டால் கப்பாமல் அ வ ன் வெற்றிபெற்றுவிடுவான் என்பதை விர கோடு சுட்டிக்காட்டி ஊக்கியிருக்கிருன். இவ்வுரை களைக் கேட்டதும் இலக்குவன் இலக்கோடு விரைந்து அம்பு கொடுத்தான். இந்திரசித்து எறி யிருந்த தேர்உடைங்து கொஅறுங்கியது. தேர்அழிந்து படவே அவன் அதிவேகமாப் அக்கரத்தில் காவி இந்திர சாலம்போல் மறைந்து போனன். தேரை இவன் உடைத்த மண்ணில் வீழ்த்தியதும் அ வ ன் விண்ணில் காவிப் போனதும் அதிசய வியப்பாய் நின்றது. மூண்டு நின்ற போர் முழுதும் மாறியது. அத்தனே வீரர் மேலும் ஆண்டகை அனுமன் மேலும் எத்தனே கோடி வாளி மழை எ ைஎய்யா கின்ற வித்தக வில்லி ேைனக் கொல்வது விரும்பி விரன் சித்திரத் தேரைத் தெய்வப் பகழியால் சிதைத்து விழ்த்தான். அழித்ததேர் அழுந்தா முன்னம் அம்பொடு கிடந்து வெம்பி உழைத்துயிர் விடுவ தல்லால் உறுசெரு வென்றேம் என்று பிழைத்திவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பின் என்ன விழித்திமை யாத முன் 5 ம் வில்லொடும் விசும்பில் சென் mன்.