பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.996 கம்பன் கலை நிலை நாம் பகலில் விழித்து உழைக்கின்ருேம்; இரவில் தாங்கிக் கழிக்கின்ருேம்; நமது விழிப்பும் உறக்கமும் அடுக்கடுத்து நிகழ் கின்றன. இவனுடையவிழிப்பு உறக்கங்கள் கெடித கழித்து கேர் கின்றன. இவ்வளவே வேற்றுமை. நாம் இடையே பகலிலும் தாங்குகிருேம். ஆகவே கணக்கைக் கூர்ந்து நோக்கின் உறக் கத்தில் நம்மினும் கும்ப கருணன் குறைந்தவனே யாவன். இவ னது தாக்கம் ஒரே சமமான தாக்கமாய் ஆ க் க ம் நோக்கி அமைந்திருக்கின்றது. இந்த அதிசய உறக்கம் சாபத்தால் நேர்ந்தது என்று சரித்திரம் குறித்துள்ளது. இவன் விழிப்பா யிருந்தால் கேவகுலம் விளிக் துபடும் என்று அஞ்சித் தேவர்கள் செய்த சூழ்ச்சியால் கெடிது துயிலும் அந்தச் சாபம் வாக்குத் தேவியின் வாயிலாப் மேவியது எனக் காவியங்கள் உரைத்திருத் தலால் இம் மான விரனிடம் வானவர் கொண்டுள்ள அச்சமும் திகிலும் அறிய வந்தன. இவனுடைய மனைவி பெயர் வச்சிர சுவாலை. கும்பன், நிகும்பன் என இரண்டு புதல்வர் இவனுக் குப் பிறந்துள்ளனர். எவ்வழியும் உச்ச நிலையில் இவனுடைய உக்கிர விர பராக்கிரமங்கள் ஒளிபுரிந்துள்ளன. இடையே துயில் நீங்கி எழுந்த இவன் அயலே நின்றவர்களை இயல்பாக நோக்கிளுன. என்னை ஏன் இப்படி இன்னலோடு எழுப்பி tைர்கள்?’ என்று சுளித்துக் கேட்டான். “அரசே! நம் அரசர் பெருமான் அழைத்து வரும்படி பணித்தார்’ என்று அவர் பணி வோடு உரைத்தார். அண்ணன் அழைக்கான் என்றதும் ஆர்வத் தோடு எழுந்தான். தனது மாளிகையை விட்டுப் புறப்பட்டு இராவணனுடைய அரண்மனையை அடைந்தான். கம்பியைக் கண்டதும் அவன் விரைந்து எதிர் வந்து உவந்து கழுவி உபசரித் துத் தனது அரியாசனத்தின் அருகே ஒரு சரியான ஆசனத்தில் இருக்கச் செய்தான். மிகுந்த மரியாதையோடு அண்ணனே வணங்கி இவன் அமர்ந்திருந்தான். மந்திரிகள் பிரதானிகள் யாவரும் மருங்கே மருங்கோடு நின்றனர். உரிய துணைவர் இரு வரும் மருவியிருந்த காட்சி அரிய மாட்சியாய்ப் பெருகிகின்றது. 1. விநயமாய் வினவியது. தம்பியை நோக்கி உறவுரிமையுடன் இராவணன் அன்புரை கள் ஆடிகுன். அரிய பல உபசாரங்களோடு இனிய உரைகள்