பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3998 கம்பன் கலை நிலை னே சிதையை இராமனிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிட வேண்டும்” என இன்னவாறு பல நீதி நெறிகளை எடுத்துக்கூறி முன்னம் * இராவணனுக்கு இத் தம்பி புத்திமதிகள் போதித் தான்; அந்தப் போதனையின்படி அண்ணன் நடந்திருப்பான் என்று எண்ணிப் படுத்திருந்தான்; விழித்து வக்கபொழுது மாறு பாடு தெரிய வந்தது; தெரியவே ஆனதோ வெஞ்சமம் என்று பரிதாபத்தோடு பரிந்து பேசி வருக்தின்ை. சமம்= போர். வெஞ்சமம் என்றது விணுன கொடிய போர் என்று இவன் கருதியுள்ளமை உரையில் வந்தது. தேவர் அசுரர்களோடு மாறுபாடு மண்டி வீர ப் போர் புரிவது மேன் மையாம்; பிறனுடைய மனைவியை இச்சித்துக் காமியாய் கின்று போராட மூண்டது மிகவும் கீழ்மையாம் என்று இவன் எண்ணி யிருக்கிருன்; அந்த எண்ணங்களின் வண்ணங்களை முன்னம் அறிந்திருக்கிருேம். நல்ல சுத்த வீரன் ஆதலால் உத்தம நீர்மை களோடு உரையாடி யிருக்கிருன். அலகில் கற்புடைச் சானகிதுயர் இனம்தவிர்ந்ததுஇல்லையோ?

இராமபத்தினிடிால் இவன் கொண்டுள்ள பரிவும் இரக்க மும் இதல்ை அறிய வந்தன. சானகி துயர் நீங்கித் தன் நாயக னேடு சேர்ந்து இனிது வாழ வேண்டும் என்று இவன் கருதி H. யுள்ளமையை உரைகள் இங்கே காணச் செய்கின்றன.

அலகு இல் கற்பு என்றது அவளது கிலேமையை நினைத்து. இராவணன் பலவகையிலும் முயன்று சீதையின் உள்ளத் தைப் பேதித்துப் பார்த்தான்; யாதொரு வழியிலும் பலியாமல் இழிந்து கின்ருன் ஆதலால் அந்த உத்தமியின் கற்புத்தன்மையை இப்படிப் புகழ்ந்து துதித்தான். நிலைகுலையாக நிலை கெரிய வந்தது. அலகு = அளவு, எல்லை. சில கற்புகள் சில சோதனைகளில் உடைந்து போம்; அவை ஒர் அளவும் , எல்லையும் உடையன; எவ்வகையிலும் உடையாமல் பாண்டும் செவ்வி தோய்ந்திருந்த தெய்வக் கற்பு ஆதலால் சீதையின் கற்பை அலகில் கற்பு என் முன். } நிலைமைகள் பல நெஞ்சம் தெளிய வந்தன.

  • இந் நூல் பக்கம் 3401 முதல் பார்க்க.