பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3999 மூவுலகங்க ளையும் ஆளுகின்ற பெரிய சக்கரவர்த்தி அவள் எதிரே படா கபாடுகள் பட்டுப் பல வஞ்சங்கள் புரிந்தும் நிலை குலையாமல் நிலைத்து நிற்கின்ருள்; அந்த நிலைமையை அறிந்து இவன் நெஞ்சம் வியந்திருந்தான்; அவ் வியப்பு ஈண்டு உரையில் வெளியாயது. தவத்தி என்று சீதையை முன்னம் இவன் குறித் திருப்பதும் இங்கே கூர்ந்து சிந்திக்கத் தக்கது. அரிய தவத்தி யிடம் கொடிய அவத்தங்களைச் செய்திருப்பது நெடிய தீமை { யாம் என கினைந்து பரிந்துள்ளன்மை உணர்ந்து கொள்ள வந்தது.) நிறையும் பொறையும் நெறியும் நீர்மையுமுடைய இ க் தகைய ஒரு உத்தமியை விழைந்து பித்த மயக்காப்ப் பிழை புரிந்து வருவது கொடிய பழியோடு குடியும் அழிக் து போம் என்று இவன் முடிவு செய்துள்ளமையால் அண்ணன் இழிந்து அழியாகபடி பலவகையிலும் உணர்வு நலங்களை உரைத்து வங் தான். இன்று முடிவு தெரிந்ததும் நெஞ்சம் உடைந்து நேரே துணிந்து பேச நேர்ந்தான். வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே. நீண்ட காலமாக வளர்ந்து வந்துள்ள அண்ணனுடைய புகழ் நிலையையும் இன்று மூண்டுள்ள அழி கேட்டையும் கருதி கொங்து கழிவிரக்கத்தோடு இங்கனம் குறித்திருக்கிருன். மண்ணும் விண்னும் ஆளர்க்கபுகழ் என்றது எவ்வுலகமும் வியந்து புகழத் தாம் உயர்ந்துவாழ்ந்து வருதலை கினைந்து வந்தது. வானவர் தானவர் யாவரும் வணங்கி ஏவல்செய்யத் திசைகள் தோறும் இசைகள் பரந்து விரியச் சிறந்த செல்வங்களோடு சக்கர வர்த்தியாய் இருந்து வருகிற இந்த இனிய வாழ்வு பாழாய் அழிந்து போக நேர்ந்ததே என்று நெஞ்சம் நொந்து கவித்திருக் கிருன். தன் குடிக்கு நேர்க்க அழிவுகள் குலைதுடிக்கச் செய்தன. ‘. புகழ் போனது பழி புகுந்தது என்னுமல் பொன்றும் காலம் புகுந்தது என்றது அழிவு நிலையை விழிகெரிய விளக்கி ஆவதை உணர்த்தியபடியாம். போன்றுதல் = அழிதல். கம்குலம் அடி யோடு அழியமூண்டுள்ளது ஐயனே! என்று உய்தியுணர உளை க்க பேசினன். அழிவு தெளிவு என்பது விழி தெரிய வந்தது.