பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4004: கம்பன் கலை நிலை யாம். நாம் உயிரோடு பிழைக்க வேண்டுமானல் சானகி இவ் ஆரை விட்டு வெளியே போப்விட வேண்டும். போகவில்லை என்ருல் காம் யாவரும் நேரே சாகவேண்டியதேயாம். ஐயனே! மேலும் விரித்துப் பேசுவகளுல் யாதொரு பயனும் இல்லை. நாம் உப்திபெற வேண்டுமாயின் ஒரே ஒரு வழிகான் உள்ளது. அது யாது? சீதையைக் கொண்டுபோய் இராமனிடம் ஒப்பித்துவிட்டு வணங்கி கின்று மன்னிப்புக் கேட்பதேயாம். அக் கேள்வி ஒன்றே நம்மை நம் குலத்தோடு வாழ வைக்கும்; வேறு வழி யாதும் இல்லை ஆகலால் அதனை விரைந்து செய்தருளுக; செய்ய மனம் இல்லையானல் சேனைகளைத் தனித் தனியே ஏவிப் பாழாக் கிப் படுதுயரடையாமல் நாம் எல்லாரும் ஒருங்கே தி ர ண் டு போய் மூண்டு போராடி முடிவு கான வேண்டும். ஈண்டு வேறு ஆலோசனைகளைச் செப்து கொண்டு பொழுதை வினே கழிப் பது பழுதேயாம்; உண்மையை ஒர்ந்து கூறினேன்; உறுவதைத் தேர்ந்து செய்யுங்கள்!” என்று இன்னவாறு யாவும் உன்னி உணர்ந்து உறுதி பெறும்படி கும்ப கருணன் உரைத்து கின்ருன். '.இக்க விரனுடைய பேச்சில் அரிய பல நீர்மைகள் நிறைங் திருக்கின்றன. பகை உறவு என்று பார்மல் நடுவு நிலைமை போடு முடிவுகளைத் தெளிந்து பேசியிருக்கிருன். உறுதி நிலைகளை வற்புறுத்தி உய்வு காட்டி உணர்த்தியுள்ளது உள்ளத்தின் மாட் சியை விளக்கியுள்ளது. புலத்தியன் வழிவந்த குலத்து இயல்பு அழிந்தது. தன் குலத்தின் பெருமையைக் குறித்துக் கும்பகருணன் கருதியிருக்கும் உறுதி கிலையை இகளுல் உணர்ந்து கொள்ளுகி ருேம். புலத்தியன் எ ன் ப வ ன் அரிய பெரிய தவமுளிைவன். பிரமாவின் அருளால் உதித்தவன். அண்டர் நாயகன் அணிதிகழ் உந்தியாம் மடுவில் புண்டரீக நான்முகன் மகன் புலத்தியன்’ என இங்கனம் புகழ்மிகப் பெற்றவன். ஞான யோகங் களில் சிறந்து அருந்தவர் யாவரும் புகழ்ந்து போற்ற விளங்கி யிருந்த அந்த மகான் குனவதி என்பவளை மணந்து விச்சிரவசு என்னும் புதல்வனைப் பயந்தான். அவன் பருவம் எய்தி வேதம்