பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4009 கருங்கடல் கடந்த குரங்கு. என அனுமானே இவ்வாஅறு நினேங்து பேசியிருக்கிருன். இத் தகைய அதிசய ஆற்றல்களுடைய வானரங்கள் பல்லாயிரக் கணக்கில் சேனைகளாய்ச் சேர்ந்துள்ளன. ஒரு குரங்கு வந்து இலங்கை புகுந்து செய்த நாச வேலைகளை நினைந்து கினைந்து அரக் கர்குலம் நெஞ்சம் கலங்கியுள்ளது. மேலும் என்ன நேருமோ? என்று யாவரும் மறுகியுள்ளனர்; நீ யாதொன்றையும் கவனி யாமல் தீதொன்றியே திமிர் கொண்டு கிற்கின்ருப்! எனக் கமை யனிடம் அமைதியாகத் தகவுரைகளாடி வந்தவன் எதிரியின் அதிசய வெற்றியை ஆவேசமாய்த் துதி செய்து கூறினன். வாலியை உரம் கிழித்து ஏக வல்லன. கோல் உள; யாம் உளேம். அழிவு நிலையில் தாம் உள்ள இழிவு நிலையை விழி கெரிய இங்ங்னம் விளக்கியருளினன். எவ்வகையிலும் எதிரியை சாம் வென்று வாழமுடியாது; பொன்றி விழவே நிற்கின்ருேம்; இங்க நிலைமையை நன்கு உணர்ந்து உய்தியை உடனே விரைந்து தேடிக் கொள்ளவேண்டும் என்று உறுதியை அறுதியாய் இறு தியில் கூறிஞன். உய்யவுரிய வழியை விழிகெரிய விளக்கினன். தையலே விட்டு அவன் சரணம் தாழ்ந்துகின் மையறு தம்பியோடு அளவளாவுதல். எய்தியுள்ள அபாயம் நீங்கி இராவணன் உப்தி பெற்று வாழ உரிய உபாயத்தை இ ன் வ அறு உரிமையுடன் உணர்த்தி வெளியே விட்டு இராமனே வணங்கிச் சமாதானமாப் இனங் கிக் கொள்வதே நல்லது என்று இப்படி வற்புறுத்தி யிருத்தலால் இவனுடைய மனநிலையையும் நீதி நெறியையும் யூக விவேகத் தையும் உணர்ந்து நாம் வியங் து கொள்ளுகிருேம். மையறு தம்பி என்று விபீடணனைக் குறித்துள்ளமையால் அவன்பால் இவன் கொண்டுள்ள அன்பும் மதிப்பும் அறிய வங் தன. மை=குற்றம். குற்றம் அற்ற குணக் குரிசிலான அந்தக் கம்பியை வெறுத்து வெளியே விரட்டியது கொடிய பாவம்; நெடிய பழி எனத் தன் தமையனுக்கு இத் தம்பி இப்படி அறி 502