பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4020 கம்பன் கலை நிலை யிருக்கலால் பிறவிப் பாசத்தின் உருக்கமும் பிரியமும் உணர வந்தன. உள்ளம் உருகவே கண்ணிர் வெள்ளம் பெருகியது. இவ்வாறு உரிமையுடன் அழுதவன் தம்பியைப் போருக்குப் போகவிடாமல் நிறுத்தி அவன் குறித்தபடியே சீதையைச் சிறை நீக்கி விடுத்து இராமனேடு சமாதானம் செய்திருக்கலாம். அவ்வாறு செய்வது தனது பெருமிகத்திற்கு இழுக்கு என்று கருதியுள்ளமையால் பிடித்த பிடியை யாதும் நழுவவிடா மல் யாண்டும் அவன் மூண்டு நின்ருன். எ வ்வழியும் நிலைமை தாழாமல் தலைமையாகவே வாழ்ந்து வந்தவன் ஆதலால் தாழ்ந்து போவது அவனல் பாதும் முடியாமல் நின்றது. கமையனிடம் விடை பெற்றுத் தம்பி மீண்டபோது அந்த இராச சபையிலிருந்த யாவரும் பரிவு கூர்ந்து மறுகி நோக்கி உருகி அழுது உளைந்து நின்றனர். எவ்வழி யோர்களும் இரங்கி ஏங்கினர். இவ்விரனுடைய பிரிவுக் காட்சி எ வ்வளவு பரிகாபத்தை விளைத்துள்ளது! என்பதை இது உணர்த்தியுள்ளது. சக்கரவர்த்தி யோடு உடன் பிறந்த கம்பி, உக்கிர வீரமுடையவன்; யாண்டும் நேர்மையும் நீதியும் வாயந்து யாவரிடமும் நடுவு நிலைமையாய் நீர்மை சுரந்துள்ளமையால் எல்லாரும் இவன் பால் மதிப்பும் பிரி யமும் மருவி வந்துள்ளனர். அவ்வுண்மை ஈண்டு வெளிப்பட்டு கின்றது. நல்ல நீர்மைகள் எல்லாரையும் உருக்கியுள்ளன. கும்பகருணனும் சிங்கமுகனும். அண்ணனுக்குப் புத்திபோதிக்க இத் தம்பிபோலவே சிங்க முகனும் குர பன்மனுக்குப் புக்தி போதித்திருக்கிருன். தேவர் களைச் சிறையில் வைத்துத் துயர் இழைத்து வந்தமையால் முரு கப் பெருமான் அசுர வேந்தன் மேல் போருக்கு எழுந்தருளி வந்தார். அவன் யாதும் மதியாமல் அகங்கரித்திருந்தான். அப் போது தம்பி சிங்கமுகன் அவனுக்கு அறிவுநலங்களைக் கூறினன். வான்செய் தேவரை நீ அலைக் கின்றதை மதியா ஊன்செய் கின்றபல் உயிருக்கும் உயிரதாம் ஒருவன் தான் செய் கின்றதொல் வரத்தினேத் தான் தவிர்த்திடுமேல் ஏன்செய் தாய் என வினவியே கிறுவுவார் எவரே?