பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,022 கம்பன் கலை நிலை கனக்கு நீதி கூறிய தம்பியைச் குர பன்மன் இவ்வாறு மோது முனிந்துள்ளான். மறம்தனை இழந்தனை, மானம்.நீங்கி?ன என அவன் இகழ்ந்து பேசினன். மறம்கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை' என்று இரா வணன் சினந்து கூறினன். சரித நிலைகளும் உரைகளும் நிறை பொத்துள்ளதை இப் பகுதியில் இணைத்து நோக்கி இயல்புகளை உணர்ந்து கொள்ளுகிருேம். கதை நிகழ்வில் ஒருமை காணினும் கவிகளின் சுவைகளில் நுகர்வு காண்பது அரிய கலையாம். அறிவின் ரசனைகள் அதிசய போகங்களாயுள்ளன. உறங்குதி போய்! என்று அண்ணன் இகழ்ந்து மொழிக்க பொழுது கும்ப கருண னுடைய உள்ளம் துடித்தது; முடிவு நேர்க் கது என்று கருதி அடங்கிக் திருந்திய பண்போடு அன்பு கனிந்து பேசி அவன் விடை பெற்று மீண்டது அரிய பெருங் கன்மை களை விளக்கிப் பெரிய பரிவுக் காட்சிகளாய்ப் பெருகியுள்ளது. கும்பகருணன் போருக்கு எழுங்கது. அண்ணனிடமிருந்து மீண்டு வ ங் த வ ன் தனது அரண் மனையை அடைந்தான். போர்க்கோலம் பூண்டான். வெளியே வந்தான்; உரிய படைகள் யாவும் பெருகி எழுந்தன. கனது அரிய தேரில் இவன் விரைவில் ஏறிஞன். சேனைத் திரள்கள் யாவும் ஆரவாரிக்கன. நால்வகைப் படைகளும் நூல் வகுக்க படி அணிவகுத்து கடந்தன. கடல்போல் புடை சூழ்ந்து முன் அனும் பின்னும் படைகள் செல்லப் பொன்மயமான கி ற ந் த இரதத்தில் ஒரு கருமலைபோல் கம்பீரமாய் அமர்ந்து திரிசூலக் தைக் கையில் எந்திப் போர்மேல் சென்ற இவ் விர னது பராக் கிரம நிலைகளை நோக்கி அமரர்களும் அஞ்சினர்; பலர் தமது தமர்களோடு அரிய புகலிடங்களை நாடி அயலே ஒடிஞர். தேர்செலக் கரிசெல நெருக்கிச் செம்முகக் கார்செலக் கைசெலப் புரவிக் கால்செல தார்செலக் கடைசெலச் சென்ற தானே அப் பார்செலற் கரிதென விசும்பில் பாய்ந்ததால். (1) தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு காமவேல் உலக்கைவாள். நாஞ்சில் தண்டெழு