பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4024 கம்பன் கலை நிலை கும்பகருணனுடைய வரவைக் கண்டு வியப்பும் விம்மிகமும் கொண்டு இராமன் இப்படி வினவியிருத்தலால் வந்துள்ள அவ னது உக்கிரவிர நிலைகளை உணர்ந்து கொள்கிருேம். மருவி நின்ற உருவத் தோற்றம் பெரிய வியப்பையும் நெடிய திகைப்பையும் விளைத்துள்ளது. நீள நோக்கி கெடிது வியந்துள்ளான். ! ஒரு கோளோடு மற்று ஒரு தோளைத் தொடர்ந்து பார்ப் பதற்கு நாள்பல கழியுமால் ஏன்றது எவ்வளவு அதிசயம்? அகன்று விரிந்து கிவந்து படர்ந்துள்ள மார்பின் மாட்சி இவ் வா.து காட்சிக்கு வந்துள்ளது. . கோளைப் பார்த்தே ஆளை வியந் திருக்கிருன். கரிய ஒரு பெரிய மலைபோன்ற உருவ நிலையைக் கரிய செம்மல் கண்டு அதிசயமடைந்துள்ளது அரிய காட்சியாய் கின்றது. சிறந்த தேகவன்மையும் உயர்ந்த போர்வீரமும் ஒரு ங்கு வாய்ந்தவன் சேனைத்திரள்களோடு சமர பூமியின் மருங்கு வரவே நெடிய போர் நேர்ந்தது என்று கடிது.துணிந்து கோதண் டவீரன் விரைந்து விழைந்து இனங்கெரிய விசாரித்து கின்ருன். வந்தவன் நிலையைச் சிங்தை தெளியும்படி தன்னை நோக்கிக் கேட்கவே விபீடணன் வணங்கி நின்று பதில் மொழித்தான். அவனுடைய உரைகளால் அரிய பல உண்மைகள் தெரிய வங் தன. பரிவும் பண்பும் வாய் மொழிகளில் பெருகி எழுந்தன. வீடணன் கூறியது. ஆரியன் அனேய கூற அடியினே இறைஞ்சி ஐய! பேரியல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்குமுன்னேன் காரியல் காலன் அன்ன கழற்கும்ப கருணன் என்னும் கூரிய குலத்தான் என்று அவன்கிலே கூற லுற்ருன். (1) தவனுணங்கி யவரும் வேதத் தலைவரும் உணரும் தன்மைக் சிவனுணர்ந் தவரின் மேலேத் திசைமுகன் உணரும் தேவன் அவனுணர்ந் தெழுந்த காலத்து அசுரர்கள் படுவர் எல்லாம் இவனுணர்க்கு எழுந்த காலத்து இமையவர் படுவர் எந்தாய்! பொருகளம் நோக்கி வருகின்றவன் யார்? என்று தன் ஆன நோக்கி இராமன் கேட்ட கேள்விக்கு விபீட்னன் இன்னவாறு பதில் உரைத்திருக்கிருன். -:இலங்கை வேங்தனுக்குக் தம்பி; எனக்கு அண்ணன், கும்ப கருணன் என்னும் பேரினன்; பெரிய போர்விரன்; அரியகுலத்தையுடையவன்; இமையவர் எவரையும்