பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4030 கம்பன் கலை நிலை போருக்கு வ ங் து ள் ள சேனைக் கடலை நீந்தி விடனன் கும்பகருணனிடம் வந்ததும்; அவன் பெரு மகிழ்ச்சி அடைந்து எதிர்ந்ததும், தனது அடியில் வீழ்ந்து தொழுத தம்பியைத் தழுவி எடுத்து மார்பில் அனைத்து உழுவலன்போடு உருகிக் கண்ணிர் சொரிந்து அவன் கின்றதும் ஆகிய பரிவுக் காட்சிகளை இங்கே நாம் கண்டு களித்து உள்ளப் பாசங்களை ஒர்ந்து நிற்கிருேம். தந்திரம்=சேனை. கால்வகைப் படைகளும் அளவிடலரிய படி கடல்போல் வந்துள்ளன. அந்தச் சேன சமுத்திரத்தைக் கடந்து உளளே புகுந்து தலைவனைக் கண்டிருக்கிற நிலைமை தெரிய வங்தது. வேறு எவரும் அந்த வீர ப் படைகளுள் புகுக் திருக்கமுடியாது. மாறுபட்டுப் பிரிந்திருந்தாலும் குலத்தின் தலைவன் ஆதலால் படைத் தலைவர்கள் மரியாதையோடு வீடண லுக்கு வழிவிட்டிருக்கின்றனர். ஆயுதபாணிகளாயுள்ள அதிபதி கள் இரு புறமும் சேனைகளை ஒதுக்கி நெறி செய்து நின்றனர். அவ்வழியே சென்று அண்ணனைக் கண்டு கண்ணிர் மல்கிக் கைகுவித்து அடியில் விழ்ந்து தொழு திருக்கிருன். செறிகழல் சென்னி சேர்த்தான். என்ற கல்ை அவனுடைய பாதங்களில் இவன் பணிந்திருக் கும் நிலைமையை நேரே தெரிகின்ருேம். போருக்கு எழுந்த பொழுது சிறந்த வீர க்கழலைக் காலில் அணிந்து வந்திருக்கின் ருன் ஆதலால் அந்த அணி இங்கே விதந்து குறிக்கவந்தது. அடி யில் முடிபட உழுவலன்போடு கொழுகவனக் கழுவி எடுத்து உங்கிை மீதார்த்து உரையாடி கின்ருன். 'கம்பி! நீ ஒருவன் தப்பிப் பிழைத்துள்ளாப்! என்பதை கினைந்து கினைக்து உள்ளம் உவந்துள்ளேன்; அவ்வாறு மகிழ்க் திருந்த என் மகிழ்ச்சி முழுவதும் இழந்துபட இன்று நீ இங்கு வந்தது என்?’ என்று கவலையோடு கும்பகருணன் வினவியிருக் கிருன். உள்ளம் உளைந்து உரிமையோடு கேட்டுள்ளான். சிந்தனை முழுதும் சிந்த என்றகளுல் கம்பி வந்துள்ளதில் அவன் கவலையடைந்துள்ளமை காண வந்தது. இலங்கையைப் பிரிக்குபோய் எதிரியை அவன் அடைந்திருப்பதில் இவன் அடைந்துள்ள மகிழ்ச்சி நிலை ஈண்டு மருமமாய் வெளிப்பட் டுள்ளது. மீண்டுவரநேர்ந்தது நீண்டகவலையாய்மூண்டுகின்றது.