பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4034 கம்பன் கலை நிலை பாதது: அமரரும் பெறுதலசியது, மண் விண் என்னும் இருவகை உலகங்களும் கனி உரிமையாப் இனிது அமைந்த அந்த அரிய சிறப்புகளை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்துள்ளேன். அவ் வாறு பெரும் பாக்கியங்களைப் பெற்றுள்ள பேரறிவாளியான நீ அறிவு கேடராய் அழிவு நிலையில் களிமிகுத்திருக்கின்ற எங்கள் பால் வந்தது ஏன்? நல்ல அமுகக்கை உண்டு மகிழ்ந்தவன் பொல்லாத நஞ்சை உண்ண நேர்ந்ததுபோல் நீ இங்கே வந்திருப் ப.து என் நெஞ்சை மிகவும் வருத்துகின்றது. குலத்தின் பெயரை விளக்க நீ பிழைத்திருக்கின்ருப், உ ன் ன ல் புலத்தியன் மரபு புண்ணியம் உடையதாய்க் கண்ணியம் அடைந்துள்ளது என்.று எண்ணி மகிழ்ந்து இன்புற்று வந்த என் உள்ளம் இன்று உன் வர வைக் கண்டு துன்பமடைந்து உளைகின்றது. இராமன் பெரிய கருமாத்துமா, அடைக்கலம் புகுக்க உன்னை அயலே அகலவி டான்; என்ன பிழை செய்தாலும் பொறுத்தருளுவான்; ஆரு யிரை விடுத்தாலும் அடுத்தவரை விடாமல் காப்பது அவனுடைய குலதருமம். அந்த உத்தமனேச் சேர்ந்த நீ பிறவி தீர்ந்து பேரின் பம் பெற்ருய் என்று ஒரின்பமாக நான் உள்ளம் உவந்துள் ளேன்; சிறு பிள்ளைத்தனமாய் ஏதேனும் பிழை செய்து விட் டாயோ? அக்கப் பெருமானைவிட்டு நீ இங்கே பிரிந்து வந்ததற் குக் காரணம் என்ன? விரைந்து சொல்லுக. புண்ணிய சீல னை அவனுக்கு இனிய உறவினய்ைப் பாவத் தீமைகளை யெல் லாம் அறவே ஒழிக் து பரிசுத்தவானகியுள்ளாய்! அத்தகைய நீ நெடிய பழிகள் படிந்த கொடியபாவிகளாகிய எங்கள்பால் அன்பு கொள்வது அவலமேயாம். கருமமும் நீதியும் தகவும் கருணை யும் பிறவியிலேயே நீ தனி உரிமையாகப் பெற்றிருக்கிருப்; பிரம தேவனிடமிருந்து பெரிய வரங்களையும் அடைந்துள்ளாய். அரிய நீதிமானை உனக்குச் சாதியபிமானம் இன்னும் போகவில்லை என்று தெரிகின்றது. இர க்கமற்ற அரக்கர் குலத்தில் பிறக்க கான் அந்தப் பாவத் தீமை ஒழிந்து போகும்படி துணிந்து இறந்துபோகவே இன்று நான் இங்கு வந்திருக்கிறேன். காலன் வாய்க் கவளமாய் நிற்கின்ற என்னை நோக்கி நீ என்ன நோக் கத்தோடு வந்தாய்? பூட்டிய அம்போடு கோதண்டத்தைக் கை யில் ஏந்தி அரக்கர் குலக்கை அடியோடு கருவறுக்க முடிவு செய்து இராமன் மூண்டு கிற்கின்ருன்; அதிசய விரனை இலக்