பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,038 கம்பன் கலை நிலை இங்கே பழியும் துன்பமும் அழிவுமே பொங்கியுள்ளன. ஈண்டு நீ வரலாமா? என்று நீண்ட பரிவோடு மறுகியிருக்கிருன். தம்பியைக் கண்டதில் அன்பு மண்டியிருப்பினும் அடுத்து ள்ள நிலைகளை நினைந்து நெஞ்சு நொந்துள்ளான். கன்குலத்துக்கு நேர்ந்துள்ள அழிவுகளிலிருந்து அவன் விலகி வாழவேண்டு என் றே உழுவலன்போடு இவன் கருதியுள்ளமையை உரைகள் உணர்த்தி வருகின்றன. உரிமைப் பாசம் உள்ளே ஓங்கியுள்ளது. புலத்தியன்மரபு அவனல் புண்ணியம் பொருந்தியது என்று எண்ணியிருத்தலால் அவனுடைய கரும நீர்மைகளை இவன் பெரிதும் மகிழ்ந்து வந்துள்ளான் என்று தெரிய வருகின்றது. அண்ணனல் பழியும் இழிவும் அடைந்துள்ள குலம் தம்பியால் புகழும் உயர்வும் பெறும் என்று உறுதிபூண்டிருக்கிருன். அறப்பெருந்துணைவன் என இராமனை இவ்வாறு கும் பகரு ணன் கருதியிருக்கிருன். பாவிகளைத் தொலைத்துப் புண்ணியத் கை வளர்க்க வந்துள்ள புனிதவீரன் என்னும் கொணி இவ்வுரை யில் ஒளிசெய்துள்ளதை உள்ளக்கண்ணுல்ஒர்ந்து கொள்கிருேம். அத்தகைய தருமமூர்த்தியை உரிமைத்துணையாய் அடைந்து கொண்டவன் பாவத்தொடர்புடைய தங்கள் பால் மீண்டு வங் தது தவறு என்று கவித்து நிற்கின்ருன். அறம் என நின்ற கம்பன் என இராமனையும், மறம் மண்டியுள்ளவர் எனக் கம் மர பினரையும் கம்பியிடம் விரித்து உரைத்து வருவது அவன் பொல் லாதவரோடு சேர்ந்து புலையுறலாகாது; நல்லவரைச் சார்ந்து நலம்பலபெற வேண்டும் என்று கருதியேயாம். தேவரும் புகழ உயர்ந்த செல்வங்களில் உவந்து வாழ்ந்து வந்த குடும்பம் தமையன் செய்த பிழையால் தாழ்ந்த போய து என்று உள்ளம் வருந்தியிருக்கிருன். நெஞ்சில் நிறைந்துள்ள வேதனைகள் உரைகள் தோறும் மோதி வெளி வந்திருக்கின்றன. பிறர்மனே நோக்கு வேமை உறவுஎனப் பெறுதி போலாம்? இவ்வுரையை ஊன்றிக் கவனிக்க வேண்டும்.