பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,039 கும்ப கருணனுடைய உள்ளக் கிடக்கையை அவனுடைய வாய்மொழிகளால் உணர்ந்து வருகிருேம். ஒழுக்கத்தை அவன் எவ்வளவு விழுப்பமாகப் பேணி வந்துள்ளான்! என்பதைக் கருதிக் கானுக் தோறும் பெரிதும் வியந்து நிற்கிருேம். பரதாரத்தை இச்சிப்பது கொடிய பழியாம்; சீதையை விட்டுவிடு என்று அண்ணனுக்கு முன்னம் இடித்து அறிவு கூறி விருக்கிருன். இங்கே கம்பியிடம் வந்தபோது இங்கனம் சொந்து பேசியுள்ளான். இதில் அவன் சிங்தை தெளிய நின்றது. பிறர் மனைவியரைப் பெற்றதாயர் என எண்ணி ஒழுகும் புண்ணிய சீலன் ஆயினும் அண்ணனேடு சேர்ந்திருத்தலால்தன் னையும் அப்பாவத்தில் ஒரு பங்காளி என்று பரிந்து கொந்துள் ளோன் ஆதலால் நோக்குவேம் எனக் கன்மைப் பன்மையில் உரைத்தான். பழிநோக்குடைய பாவிகள் எனப்பரிகபித்துளான். தமையன் செய்துள்ள பாவம் குலநாசத்துக்கு ஏதுவாய் கின்றது; அந்த அழிவு நிலையில் இங்கே சாகவந்திருக்கிறேன்; பழிபடிந்து பாழ் படவந்துள்ள என்பால் விழுமிய நீ வரலாமா? வந்தது சிங்கையை நோகச் செய்கிறதே என்று நொந்து கலுழ்க் துள்ளான். நோகல் நீதி நிலையில் நேர்ந்துள்ளது. பிெறர் மனைவியை நோக்குவது பெரும் பாவம் என்று கருதி யிருக்கலால் இவனது சீலமும் சீர்மையும் ஞாலம் அறியவந்தன." பிறன்மனை நோக்காக பேராண்மை சான்ருேர்க்கு அறன்ஒன்ருே ஆன்ற ஒழுக்கு. (குறள், 148) சான்ருேர்க்கு அரிய ஒழுக்கமும் பெரிய கருமமும் பிறர் மனைவியரை விரும்பி நோக்காமையேயாம் எனத் தேவர் இங்க னம் உரைத்திருக்கிரு.ர். குறிப்புரைகள் கூர்ந்து சிங்திக்கவுரியன. பிறன் மனை நோக்காகவரே பேராண்மையாளர்; அவரே சான் ருேர்; அவரே கரும சிலர்; அவரே உத்தம ஒழுக்கமுடையவர் என்னும் தத்துவங்கள் இதில் உய்த்துணர வந்தன. GI வ்வளவு ஆண்மையாளரும் இந்தநோக்கில் கீழ்மை அடைந் அதுள்ளமையால் இதில் பழுதின்றித் தேறியவரே பேராண்மையா ளர் எனப் பெரும் புகழ் எ ப்தி நேராண்மை கொண்டுள்ளனர்.