பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4040 கம்பன் கலை நிலை பல்லாயிரம் பகைவரை வெல்ல வல்ல விரரும் பிறர் மனேவி யரை நோக்கிப் புல்லிய ராப்ப் பல்விளித்து நிற்கின்றனர். கீரர் குசர் எவரையும் பெண் ஆசை பேடிகள் ஆக்கிவிடுகின்றது. வெள்ளியங்கிரியை வேரோடு எடுத்தவன், அமரர்.அசுராை அடங்க வென்றவன்; எ வரும் கனக்கு நிகரில்லை எ ன்று விர பராக்கிரமங்களில் விறுகொண்டவன்; அத்தகைய அடலாண் மையுடைய இராவணன் சீதையைக் கண்டதும் சித்தம் கலங் கிப் பேதையா யிழிந்துள்ளான்; அந்தப் பத்தினியின் அடியில் தன் முடிபட விழுந்து கொழு திருக்கிருன். அவனுடைய ஆண் மை யெல்லாம் இதில் அவலமா யழிந்துள்ளன; ஆகவே அவ் வா.) நோக்காமை பேராண்மை என வந்தது. பெண்மைக்குக் கற்பு பெருமகிமை கருதல்போல் ஆண் மைக்கும் அது அதிசய மகிமையை அருளி வருகின்றது. ஒரு பெண்ணை நோக்கி 'இவள் உத்தமி” என்ருல் கல்ல பதிவிரதை என்று உலகம் அவளை உணர்ந்து கொள்ளுகின்றது. அவ்வாறே ஒரு ஆனே நோக்கி "இவன் உத்தமன்’ என்ருல் சுத்தமான ஏக பத்தினி விரகன் என்பது தெளிவாயுள்ளது. மனிதனைப் புனித நிலையில் உயர்த்தி இது தனி மகிமை புரிகின்றது. பேராண்மை சான்ருண்மை கருமம் ஒழுக்கம் என்பன எல்லாம் ஏகபத்தினி விரதத்தில் இனிது அமைந்திருக்கின்றன. புகழும் புண்ணியமுமான இந்த ஒழுக்கத்தைக் கைவிட்டுப் பிறன் மனைவியை விழைக்கதினலேதான் இராவணன் ւցՏպմ பாவமும் அடைந்து இழிவுற நேர்ந்தான். 'இழிந்து அழிக் து போக நேர்ந்துள்ள எங்கள் பால் ஏன் வந்தாய் கம்பி!” என்று கும்பகருனன் இங்கே கும்பி கொதித்துக் கூறியிருக்கிருன். அண்ணன் அயல் மனைவியை நோக்கியதால் தன் குலம் அழிவு நிலையை நோக்கியது என விழிநீர் சொரிந்திருக்கிருன். கள்ளம் கபடுகள் இல்லாத இவனது உள்ளத்தின் தாய்மையை உரைகளால் உணர்ந்து நாம் உவந்து வருகிருேம். நீதியும், தருமமும், நிலைமையும், புலமையும் தலைமையாகப் பெற்றுள்ளவன் எனத் தம்பியைப் பாராட்டி யிருக்கிருன். அத் தகைய நீதிமான் அரீதியாளர் பக்கல் ஆர்வம் கூர்ந்து வரலா