பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,053 நீ ஒருவ்ன் வாழ்ந்து நின்ருல் கம்குடும்பம் தாழ்ந்துபடாது. உன் மக்களின் நன்மையைக் கருதியாவது எம் பக்கம் வந்து சேருக. கெடிய அரச கிளே முடிவடையாதபடி கடிது பேணுக. தன்குடிக்கு இறுதிசூழ்ந்தான் தன்மக்கள் தலையொடுந்திரிவர். - கும்ப கருணன் இராமனேடு சேர்ந்து கொண்டால் தனது இராசகுடும்பம் அழியாதிருக்கும் என இவ்வாறு விழி தெரிய விளக்கினன். இந்திரசித்து, அதிகள்யன் முதலிய அரசகுமாரர்கள் இனிது வாழும் பொருட்டாவது நீ இருந்து வாழ வேண்டும் என்.அறு வேண்டியிருக்கிருன். (தன்குடிக்கு இறுதி சூழ்ந்தான் என இராவணனை இவ்வாறு குறித்திருக்கிருன். சிறந்த செல்வக் குடி இழிந்து அழிந்து போகும்படி கொடிய தீமையைச் செய்து கெடிது செருக்கி நிற்கின்ருனே! என்று .ெ ஞ் ச ம் கொதித்திருப்பதை இந்த வார்க்கை வார்த்துக் காட்டியுள்ளது. அந்தக் குடிகேடனுக் காக மூண்டு பொருது நீ மாண்டு போகலாகாது என்று மறுகி யிருக்கிருன். குடிகேடும் குலக்கேடும் நேர்ந்துள்ளனவே என்று நெஞ்சம் துடித்துள்ளது. ஒருவன் செய்த கேடு உலக நாசக் துக்கு ஏதுவாய் கின்றது என நிலைமையை நினைந்து நெடிது நொந்திருக்கலை உரைகள் யாண்டும் உணர்த்தி வருகின்றன. ஆனவரையும் அறிவு கூறிப் பார்த்து முடியாது எ ன்.அறு முடிவில் கைவிட்டு வந்தவன் ஆதலால் இப்படி வாய்விட்டுப் பேச நேர்ந்தான். உறுதியழிந்து உள்ளம் கொங்துள்ளது. மக்கள் தலை யொடுந்திரிவர் என்றது வாழ்வின் நிலை தெரிய வந்தது. இந்தப்பக்கம் நீ வந்து சேரவில்லையாளுல் அந்த மக்கள் எல்லாரும் ஒக்க மடிவர்; முடிக்கலைகள் படித்தலத்தில் உருளும் என முடிவுகளை வடித்துக் காட்டியிருக்கிருன். தன்பால் வந்து சேரும்படி வந்தனைபுரிந்து சிந்தனை தெளிய உரிமையுடன் மறுகிப் பேசி வருகிருன். போரில் மூண்டு வந்த வனுடைய உள்ளம் நேரில் மீண்டு திரும்பும்படி அறிவுரைகள் பரிவு கோய்ந்து பாசம் பாய்ந்து நேசம் கூர்ந்து வந்துள்ளன. வேதங்ாயகனே உன்னேக் கருணையால் வேண்டி விட்டான்.