பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4953 இருகை ஒரு களிறு. இந்த உருவக வுருவில் இராமனே இங்கே கவி நயமாக் காட்டி யிருக்கிருர். உரிய இடத்தில் அரிய பெயர் தெரிய வந்தது. ஒரு பெரிய மதயானையின் காலில் மிதிபட்ட காட்டுப் புதர் கள் போல் இராக்கதர் கூட்டங்கள் இராமன் எதிரே சின்ன பின்னமாய்ச் சிதைந்து பாண்டும் இன்னலுழந்து இழித்து செத்தன என்பதை உய்த்துணர இங்கனம் உரைத்தருளினர். உலக யானைகள் எவையும் ஒரு கையே உடையது; இந்த யானே இரண்டு அழகிய கைகள் உடையது. அது ஒன்றும் கொடுக்க இயலாத வெறுங்கை; இவை எல்லாம் கொடுக்கவல்ல செல்லக் கைகள். யாவும் பாண்டும் யாருக்கும் அள்ளிக் கொடுத்து வந்த வள்ளம் கைகள் ஈண்டு அரக்கர்களைத் துள்ளத் துடிக்கக் கொல்லுகின்றன. இக் கொலையும் கலையாய கொடை யாப் நிலவி கின்றது. வெய்ய துயரங்களிலிருந்து நீங்கி வைய மும் வானமும் உய்ய வழி செய்து வருதலால் உயர்தர வண்மை யாய் இது ஒளி செய்துள்ளது. வீரக்கொடை விழிகெரிய வந்தது. கொலை நிலை. பொல்லாத களைகளை நீக்கி நல்ல பயிர்களை வளர்க்கும் ஏர் உழவன் போல் இவ் விர வுழவன் அரக்கரை அடியோடு களைந்து எறிந்து வருகிருன். உயர்க்க குறிக்கோளோடு போர் கடந்து வருகிறது. கரும நீதிகளுக்காக அநீதிகளை அழித்து வரு கலால் இந்த அழிவுகளைச் செய்பவன் விழுமிய வீரனப் விளங்கி கி/ம்கின்ருன் அதிசயமான விர வினை துதி கொண்டு கின்றது. ஒரு சிறு பிராணியைக் கொன்ருலும் கொலை என்று குலை துடிக்கின்ருேம்; அங்கனம் கொன்றவனைக் கொலைஞன் என்.று கொதித்து வைகின்ருேம்; கோடிக் கணக்கான அரக்கர் திரள் களே இராமன் இங்கே கொன்று குவிக்கின்ருன். அந்தக் கொலை கிலேகளைக் கண்டு நாம் உள்ளம் உவந்து மேலும் மேலும்வியந்து வருகின்ருேம்; கொடி செடிகளிடமும் கருணை புரிந்து பசும் புல் லும் நோக மிதியாத அருந்தவர்களும் இந்தப் பெருங் கொலே களே விரும்பி நோக்கி வீர மூர்த்தி என இராமனை வியந்து புகழ்ந்த உவந்து கொண்டாடி வருகின்ருர். கொலையின் மருமம் 620