பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5000 கம்பன் கலை நிலை மைவந்து சேர்ந்துள்ளவனுக்கு அல்லல் யாதும் அனுகலாகாது என்று உள்ளம் துணிந்து உரிமை யோடு ஊக்கி விரைந்தான். அடைக்கலம் புகுந்தவன் அழியப் பார்ப்பது என்? இலக்குவன் கருதி மூண்டுள்ளதை இது காட்டியுள்ளது. கருத்தும் குறிப்பும் கூர்ந்து சிங்தித்து ஒர்ந்து உணர வந்தன. இலங்கை வேங்கன் வெறுத்துத் துரத்தியபின் இர ாமனே தஞ்சம் என்று நெஞ்சம் துணிந்து வந்து நேரே அடைக்கலம் புகுந்தவன் ஆதலால் அந்த விபீடணனை எவ்வழியும் இனிது பாது காப்பதே தனது செவ்விய கடமை என்.றுதிவ்விய நீர்மையோடு இளையவன் எண்ணி முன்னே விரைவாய் முனைந்திருக்கிருன். அடைக் கலமாய்த் தன்னை அடையவில்லை; அண்ணனேயே சரணம் அடைந்திருக்கிருன்; ஆயினும் அம் முன்னவன் செய் யவுரியதைப் பின்னவன் மூண்டு புரிந்தான். கரும நிலையில் உயி ரின் கிழமைகள் மருமமாய் மருவிக் கருமங்கள் மிளிர்கின்றன. தமையனது அடைக்கலப் பொருளைக் காக்கற்காகக் கன் இன்னுயிரைக் கம்பி முன்னுற வழங்க நேர்ந்தது அரிய தியாக மாப் விளங்கி நின்றது. தன்னை அடைந்த ஒரு புருவைப் புரங் தருள முன்னம் உயிரை உவந்தருளிய புண்ணிய வேந்தன் மர பில்வந்தவன் ஆகலால் அடைக்கலம் காக்க ஆர்வமாப்முக்தின்ை. காட்டுப் பறவையைக் காத்தருளத் தன்னுயிராம் கூட்டுப் பறவை கொடுத்தளித்தான்-ஈட்டுபுகழ் வள்ளல் வழிமரபில் வந்தான் இளேயவனும் உள்ளுவந்து தந்தான் உயிர். என்று உம்பரும் இம்பரும் ஒருங்கே பரிந்து மருங்கெங்கும் மறுகி நின்று உருகிப் புலம்ப இலக்குவன் உறுதியாப் முன்னே புகுந்தான். தன் செஞ்சில் அந்த வேலை கேரே காங்க இவன் அஞசாமல் பாய்ந்தது அதிசய தீரமாய்த் தோன்றியது. ஏற்பன் என் தனி மார்பின். இராவணன் ஏவிய வேல் அதிசய மகிமையுடைத; எவ் வகை ஆயுதங்களாலும் யாதும் தடை செய்ய முடியாது; வெளியே விட்டால் ஓர் உயிரைப் பருகாமல் வறிதே மீளாது