பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 47.43 வில்லிடை கழித்த மிடல் வாளி வெருவித் தம் பல்லிடை கிழித்திரிவ கண்டு பயன் உய்ப்பாய். (1) குரங்குபட மேதினி குறைத்தலை படப்போர் அரங்குபட மானுடர் அலேந்தலே படப் பேர் இரங்குபடர் சிதைபட இன் அறு இருவர் கின் ருர் சிரம்கு வடு எனக் கொணர்தல் காணுதி சினத்தோய்! (2) ( யுத்த, மந்திரப்படலம்) மூண்டு வந்துள்ள குரங்குப் படைகளைக் கொன்று தொலை த்து, எஞ்சி நின்றவைக ளெல்லாம் பல்லை இளித்துக் கொண்டு திசைகள் தோறும் சிதறி அஞ்சி ஒடும்படி செய்து, இராமன், இலட்சுமணன் என்னும் அந்த மனிதர் இருவருடைய தலைகளைக் கொப்து இரண்டு சிரசுகளையும் ஒருங்கே எனது இடது கையில் தாக்கிக் கொண்டு ஒல்லையில் வந்து உங்கள் முன்னிலையில் கான் வில்லும் கையுமாய் நிற்பகை நீங்கள் நேரே விழிகளிப்பக் காண் பீர்கள்; நேரத்தைக் கடக்காமல் போருக்கு விடை தாருங்கள்! என்று அன்று வீரச் செருக்கோடு பேசினவன் இன்று உள்ளம் கலங்கி உறுதி குலைத்து பரிபவம் மீதுளர்ந்து மறுகிப் பேசியிருக்கி முன். அனுமர்வடைய சொல்லடியும், இலக்குவனுடைய வில்ல டியும் இந்திர சித்தின் நெஞ்சைக் கலக்கி கிலே குலைத் தள்ளன: அந்த உண்மையை உரைகள் உணர்கதி நிற்கின்றன. கொடிய திவினையே முடிவாக வந்து மூண்டுள்ளது என நிலைமைகளை யெல்லாம் கினைந்து இனைந்து நேரே முடிவுசெய்துகொங் தள்ளான். குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடிக் கொண்டோம். உள்ளம் சலித்து இந்திர சித்து இப்படிப் பேசியிருக்கிருன். இந்த வாய் வார்க்கை அவன் உள்ளத்தில் மூண்டுள்ள கொடிய துயரங்களையும் செடிய அல்லல்களையும் நேரே வார்த்துக் காட்டி யுள்ளது. பகையின் நிலையை நினைந்து மொழியாடி யிருக்கிருன். பகை தேடிக் கொண்டாய் எனத் தங்கையைத் தனியே பிரி த்துச் சொல்ல வில்லை; தன்னையும் உட்படுத்தித் தன்மைப் பன் மையில் கூறினன். குடும்ப மரியாதையோடு கெழுதகைமை தோய்ந்து பேசியுள்ளான். பேச்சில் பெருங்தன்மைமிளிர்கிறது. பாவத்தால் பழியும் துன்பங்களும் வரும்: