பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 50.27 நினைந்து வியந்து அவனே இங்கே புகழ்ந்து போற்றி யிருக்கலால் இக் குல விர னுடைய இயல்பான உபகார நிலையை ஒர்ந்து உணர்ந்து நாம் உள்ளம் உவந்து உயர்ந்து கொள்கிருேம். அயலார் அல்லலுக்கு இரங்கி உதவுகின் றவன் உலகம் - ՅեԵՔ உயர்ந்து திகழ்கிருன். தீன தயாளன் என்று கடவுளுக்கு ஒரு பெயர். ஏழைகளுக்கு இரங்கி அருள் பவன் என்னும் பொருளை அப் பெயர் உயர்வான உரிமையோடு மருவியுள்ளது. இர க்கம் மனிதனை மகான் ஆக்குகிறது, ஈகை அவனைத் தெய்வமாத் திகழச் செய்கிறது. செவ்விய இகநலங்களால் திவ்விய நிலைகள் விளைகின்றன. அவ்விளைவு விழி கெரிய வங்கது. “Men resemble the gods in nothing so much as in doing good to their fellow creatures.” (Cicero) தம்மைச் சார்ந்த சீவர்களுக்கு நன்மை செய்யும்போது தான் மனிதர் தெய்வங்களாய்த் திகழுகின்றனர் என ஸிஸ்ரோ என்னும் பெரியார் இங்கனம் சீர்மையோடு கூறியிருக்கிரு.ர். “To pity distress is but human; to relieve it is God like.” (A. Mann) பிறரது துன்பக்கைக் கண்டு இரங்கும் போது ஒருவன் உண்மையான மனிதன் ஆகிருன்; அந்தத் துயரை நீக்கியருளி ஞல் அவன் கடவுள் போல் நிலவுகிருன்'எ ன்னும் இது இங்கே ஊன்றி உணர உரியது. அன்பான ஆதரவு அரியதை அருளுகிறது. சீவர்களுக்கு உதவி செய்கின்றவன் கேவன் ஆகின்ருன்; ஆகவே உபகாரத்தின் உத்தம தத்துவத்தை உய்த்தணர்ந்து கொள்கிருேம். பிறர்க்கு இகம்புரிவது பேரின் பமாய் வருகிறது. இடர் காணின் கறவை கன்றைக் காக்கல் போல் அருளா ளர் எ வரையும் காக்கருளுவர் என்னும் இந்த வார்த்தைகள் இராமபிரானுடைய இரக்கத்தையும் ஈகையையும் உயிர்களின் துயர்களே நீக்கியருளும் உயர் பெருந்தகைமையையும் உபகார நீர்மையின் உறுதிநிலையையும் உலகம் அறிய உணர்த்தியுள்ளன. நல்லவர்களின் துயர்களை நீக்கவே பொல்லாதவர்களை அழித்துப் போக்கி வெற்றிக் களிப்போடு வந்த வீரன் உற்ற கம்பி செய்துள்ள உதவி நிலையை உணர்ந்து உள்ளம் களித்தான்.