பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5088 கம்பன் கலை நிலை இலங்கைப் போர் மண்ணுலகில் நிகழ்ந்து வந்தாலும் விண் அணுலக வாசிகளும் அதனை வியந்து நோக்கி உவந்து வருவதைக் காவியத்தில் இடங்கள் தோறும் உணர்ந்து வ ரு கி ேரு ம். கோதண்டபாணியின் போர் வீரம் மூதண்டங்களிலும் ஒளி விசி உலாவுகின்றது. அந்த நிலையை நீண்ட காலமா வியந்து சிந்தை தெளிந்து வந்தவன் ஈண்டுவந்தனையோடு வணங்கிமொழிந்தான். மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி. தேர்ச்சாரதியாய் வந்துள்ளவனது பேரும் சீரும் இதல்ை அறியவந்தன. குதிரைகளின் சாதி வகைகளையும் குணம் குற்றங் களையும் மனநிலைகளையும் ன் கு தெளிந்தவன்; அவனுடைய கொழிலில் அதிசய நிலையினன்; தேவராசன் உவந்து புகழ்ந்து வியந்து மகிழத் தேரைச் செலுத்திச் சீரைப் பெருக்கி வந்துள்ள கிபுணன் என்பதை நேரே தெரிந்து கொள்கின்ருேம். மா என் பது இங்கே தேவசாதிக் குதிரைகளே உணர்த்தி நின்றது. தேரை கடத்துவதிலும் போர் நிலைகளை நுணுகி அறிந்து யாண்டும் துணி வோடு செயல் புரிவதிலும் சிறந்த ரேன் என்று தெரிய வந்தது. ஐயனது ஐயம். அதிசயமான விமானத் தோடு வந்து கின்று உரிமையுடன் உரையாடிய ஊர்தியின் மொழிகளைக் கேட்டு இராமன் உள்ளம் உவந்தான்; ஆயினும் உள்ளே ஒருஜயம் நிகழ்ந்தது. இதுவரை அயலேயிருந்து போரில் நமக்கு யாரும் ஆதரவு செய்ய வரவில்லை; இது பொழுது மாய விசித்திரமான கேர் வந்துள்ளது; சாரதி சாதுரியமாய்ப் பேசுகிருன், வரவும் பேச்சும் உறவுரிமைகள் போல் தோன்றுகின்றன; அரக்கர் இவ்வாறு மாய வஞ்சமாய்ச் குழ்ச்சி செய்யவும் கூடும்; இலங்கை வேந்தன் சகிபுரிவதில் அதி சமர்த்தன்; அவனது தீய மாய வேலையா ப் இவ்விமான வரவு. இருக்குமோ?” என்று இம்மான வீரன் ஐயுறவோடு கருதவே அந்தத் தெய்வப் பரிகளிடமிருக்கு ஒர் வேக ஒலி வெளியாயது. அகனக் கேட்டதும் தெளிவடைந்தான். அதன் பின் சாரதியை நோக்கி உன் பேர் என்ன? என்று உரிமையோடு இவ் வீரன் கேட்டான். ஐயம் .ே அவனும் மெய்யை உரைத்தான்.