பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4767 போர்மேல் மூண்டு பரிதாப நிலையில் நேரே தேர் மேல் போன இந்திர சித்தைப் பின் தொடர்ந்து இலங்கை வாசிகள் சென்றி ருத்தலை இங்கே நன்கு தெரிகின்ருேம். தங்கள் சக்கர வர்த்திக் கிருமகனை இளவரசு இழவு நிலையில் அழுது போவதைக் கண் டதும் அரக்கர் எல்லாரும் விரைந்து எழுந்து இவனுக்கு முன்ன தாகவே அழிந்து மடிய வேண்டும் என்று தணிந்து வங்கனர். போரை நோக்கிச் செல்லும் தேரைச் சூழ்ந்து எம் மருங்கும் நெருங்கி வருகிற கிருகர் திரள்களை நோக்கி இந்தி சித்து தேரை கிறுத்தினன்; அவர்க்கு ஆறுதல் கூறினன்: ' என்பால் பேர ன்பு நிறைந்த என் குலவி ர்களே! நீங்கள் யாதும் கவலையற வேண் டாம்; இந்த முறை எதிரிகளை நான் வென்று விடுவேன்; எனக் காக விேர் துணை வர வேண்டியதில்லை; உரிய படைகள் உடன் வருகின்றன; அவையே போதும்; அரசர் பெருமான் கனியே இருக்கிருர், அவர்க்கு ஆ த வு புரிந்து எவ்வகையும் இகமா அவரை ப் பாதுகாத்து நில்லுங்கள்’ என்று நீதி மொழிகள் கூறி கிரு கர்திரளே கிறுத்திவிட்டுப் பொருதிறலோடு போகநேர்ந்தான். கலங்கலிர்! மன்னனைக் காமின்! தன்னைக் கொடர்ந்து வந்த இலங்கை வாசிகளை நோக்கி இந்திர சித்து இவ்வாறு கூறியிருக்கலால் அவர் கலங்கியுள்ள கலக்க நிலைகள் துலங்கி நின்றன. மேகநாதன் சாகவே போகின் ருன் என்று விவேகமாய்த் தெரிந்து கொண்டமையால் கிருதர் யாவரும் ஏகமாய்க் கலங்க நேர்ந்தார். உள்ளம் கலங்கி வந்த அவரை மெல்லக் கேற்றி ஊரிலிருந்து கங்கைக்கு உதவி புரிந்து வரும்படி பணித்தான். உரிமைப்பாசம் உரையில் வெளியாயது. தான் அழிய நேர்ந்தாலும் தன்னுடைய கங்தை சுகமாய் வாழவேண்டும் என்று இக்குலமகன் எண்ணியிருப்பது உலக மக்களுடைய உள் ளங்களை உருக்கி கிற்கிறது. இத்தகைய உத் கம புத்திர னக பரிகாப நிலைகளை நேரில் கண்டும் ஒரு சிறிதும் இரங்காமல் பெருமிக நிலையிலேயே உறுதி பூண்டு இராவணன் ஊக்கி நின்றது அவனுடைய அழிவு காலத்தின் களியாட்டமே யாம். நாசகாலம் நேர்ந்த போது ஆங்காரத் திமிர் யாருடைய யோசனையையும் கேளாமல் நீச நிலையிலேயே நிமிர்ந்து நிற்கிறது.