பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4779 மனிதன் மீதும் வானரங்கள் மீதும் நேரே அம்புமாரி பொழிக் துள்ளவன் மேல் வானவர் பூமாரி பொழிந்துள்ளனர். குல விரோதிகளும் உளம் மகிழ்ந்து புகழ இந்திரசித்து அடலாண்மை யோடு போர் ஆடல் புரிந்திருப்பது வியந்து சிந்திக்கத் தக்கது. சூரர் என்பார் துஞ்சும்போது உணர்வில் சோரார். போரில் மூண்டு போராடி கின்ற குரர் அங்கே வெல்ல முடியாமல் அல்லல் அடைந்து சாக நேர்ந்தாலும் தம் உள்ளம் களரார்; உணர்வு குன்ருர்; உறுதியான ஆண்மையோடே சாவை உவந்த கொள்ளுவர் என்பது இதல்ை உணர வந்தது. திரம், சூரம், விரம் என்னும் மொழிகள் நேரே வீரத்திறல் களையே விளக்கி வருகின்றன; வரினும் கம்முள் வேறுபாடுகள் மருவி உள்ளன. விரப் பேர்கள் சீரை ச் சேர்ந்தன. தீரன் = யாண்டும் அஞ்சாக ஆண்மையாளன். சூரன் = எதிரி அஞ்சி அயர அடலாண்மை புரிபவன். விரன் = பெருந்தன்மை நிறைந்த அருங் திறலாளன். சூரத் தனத்தில் இந்திரசித்து பேர்மிகப் பெற்றவன்; வில் விரத்தில் எல்லையில்லாத வல்லமை யுடையவன்; யாரிடத்தும் தோல்வி கண்டறியாதவன்; எங்கும் வெற்றியே பெற்று வந்த வன்; அழிவு காலம் மூண்டமையால் இங்கே அல்லல் அடைய நேர்ந்தான்; நேர்ந்தாலும் நெஞ்சம் கலங்க வில்லை; அஞ்சாத தீரத்கோடே அடலாண்மைகள் புரிந்து வருகிருன். அவனு டைய அதிசய நிலையை நோக்கி இலக்குவனும் வியந்தான். இவ் விரக் குரிசிலின் வியப்புகள் அத் தீரன் செய்துள்ள அருந்திற லாண்மைகளைத் துலக்கி அம்புகங்களை விளக்கி கின்றன. நான் எய்த அம்புகளைத் தன் உடலில் இருந்து பறித்து என்மேல் விருேடு அவன் மாறி விசுகின்ருன்; எறிகின்ற குறிப்பு யாதும் தவறவில்லை; உள்ளம் கலங்காமல் ஊக்கியே போராடுகின்ருன்; தேகம் முழுவதும் சல்லடைக் கண்களாகப் பானங்கள் ஊடுருவிப் போயுள்ளன; போயினும் மான வீரம் குன்ருமல், மூண்டு முனைந்து மீண்டும் மீண்டும் வென்று விட வேண்டும் என்றே நீண்டு வருகிருன்; எத்துணை வீரம் இச்