பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5326 கம்பன் கலை நில பிரிக்க பேதைப் பிராணியாய்க் கொடிய சிறையில் நெடிய காலம் கைந்துள்ள மிடியள் எனத் தனது தின நிலையை நொந்து கூறியுள்ளமையை இதில் துணுகி உணர்ந்து கொள்ளுகிருேம். இவண் இருந்த தன்மை என்றது இனிய நறுமலர்ச்சோஆல யான அந்த அசோகவனத்தில் சோகமே உருவமாயிருந்த துயர கிலே தெரிய கின்றது. எங்கள் கோமான் என ஆர்வம் மீதார்ந்து தன்மைப் பன்மையில் கழுவி மொழிந்துள்ளாள். கன் குலத்த வரையும் இலக்குவன் முதலிய கிளையாரையும் கிழமையோடு தழுவி உரிமையுடன் கூறி யுள்ளமை தெளிவா அறிய வந்தது யாதொரு அலங்காரமும் கொள்ளாமல் இலங்கைச் சிறை வாழ்வின் அலங்கோல கிலையிலேயே தனது நாயகனக் கான வேண்டும் என்று இத்துளயவள் துணிவோடு கருதியுள்ளாள். அணிகள் முதலியன புனேவதையும் வீண் பெருமைகளையும் எப்பொழுதும் இத்தேவி வெறுத்திருக்கலைச் சீவிய சரித்திரத்தில் படித்து வந்திருக்கிருேம். அரிய இயல்புகள் தெரிய கின்றன. அடக்கமும் அமைதியும் உள்ளப்பண்பும் நல்ல நீர்மைகளும் இக்குலமகளிடம் தலைமையாய் என்றும் குடிகொண்டுள்ளன. Seek to be good, but aim not to be great; A woman’s noblest station is retreat. [George Lyttelton] நன்மையாயிருக்க நாடு; பெருமையாயிருக்க விரும்பாதே; ஒரு பெண்ணினுடைய கண்ணியமான நிலை மரியாதையாப் ஒதுங்கியிருப்பதே என்னும் இது இங்கே கன்கு அறிய வுரியது. உயர்ந்த பெண் மைக்கு உரிய சிறந்த சீர்மைகள் யாவும் இவ்வுக்கமியால் ஒளிபெற். மிளிர்கின்றன. சிறையில் இருந்த படியே கனக நாயகனைக் காண வேண்டும் என்று இக்நாயகி உறுதியாக் கூறவே வீடணன் மீண்டும் விநயமாய் வேண்டி ன்ை. ' கோலங்கொண்டு சீரோடு வர வேண்டும்' என்றே ஆண்டவன் தெளிவாச் சொல்லி விடுத்தார் என்று அவன் உரி மையோடு சொல்லவே சரி என்று இசைந்தாள். இசையவே தெய்வ மங்கையர் யாவரும் இக் கங்கைக்குச் செப்ய வுரியன செய்ய நேர்ந்தனர். அவருடைய செயல்களில் உழுவலன்பும் வி ழு மி ய பண்பும் கிழமையும் கேண்மையும் வளமையாக் கெழுமி கின்றன. யாவரும் ஆவலோடு அயலே சூழ்ந்தனர்.