பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5414 கம்பன் கலை நிலை களே அமைத்துள்ள அரசர் பெருமகிழ்ச்சியாப் வாழ்கின்றனர் என ஜாண் போர்டு என்பவர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். The king will best govern his realm who reigneth over his people as a father doth over his children. (Agesilaus) பிசா பிள்ளைகளைப் பேணுவது போல் தன் குடிகளைப் பாது காத்து வருகிற அரசனே தனது இராச்சியத்தை நன்ருக ஆளு கின்ருன் என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது. தேச மக்கள் உள்ளம் உவந்து புகழ்ந்து வரும்படி ஆட்சி புரிக்கருள் என்று அரசு முறையைப் போதிக்கவன் பின்பு வழி அனுப்பும் வகையைக் தெளிவுறுக்தின்ை. விடணு! நீ நல்ல நீதிமான்; உனக்கு யாரும் புக்தி போதிக்க வேண்டியது இல்லை; ஆயினும் எனது ஆர்வத்தால் இக்க அரச கருமங்களைக் கூற நேர்ந்தேன்; இனி நீ இங்கே சுகமாய் இருந்து வாழுக’ என்று வாழ்க்கினன். வழி அனுப்பியது لكي لوكه கெரிய வந்தது. இலங்கைமா நகருள் இனி நீ போதி. முடிவில் இவ்வாறு கூறி யருளினன். கருதிய காரியங்கள் உறுதியாய் நிறைவேறின, கருமங்கள் யாவும் கருமங்களோடு தழுவி முடிந்துள்ளன; இனி கான் என் ஊருக்குத் திரும்பிப் போக வேண்டும்; நீ இங்கே சுகமாப் இருக்த அரசு புரிந்து அருளுக; இது பொழுது உன் நகரைப் பொன்னகரவாசிகள் போற்றி நிற்கின்றனர். அந்த நிலை நிலைத்து வர நினைத்து வருக. ஏதிலார் தொழும் இலங்கை ஆக உனது இராசதானி துலங்கியிருப்பதை நோக்கி நான் உவந்த நிற்கிறேன். ஏதிலார்= பகைவர். முன்னம் இலங்கையை நினைக்க போதெல்லாம் கெஞ் சம் கலங்கி அஞ்சி நடுங்கியிருந்த தேவர்கள் இன்று இதனைத் திசை நோக்கித் தொழுது மகிழுகின்றனர்; நீ அரசனப் அமர்க் திருப்பதே அமரர்கள் மகிழ்ந்து வருதற்குக் காரணமாப் நின் |றது. உனது நிலைமையும் தலைமையும் நீர்மையும் சீர்மையும் உலகம் உவந்து காண எவ்வழியும் செவ்வையாஓங்கி நிற்கின்றன. கருமநீதியோடு நீ ஆட்சி புரிந்து வருவாப் என்றே தேவர் முகல் ப வரும் ஆவ லோடு பாண்டும் எதிர்பார்த்துள்ளனர். ஆதி கான்மறைக் கிழவனின் குலம்.