பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5 155 கருப்புக் கார்மழை வண்ண அக் கடுந்திசைக் களிற்றின் முருப்புக் கல்லிய தோளவன் மீளரு மாயம். (1) விக்கு வாய் அயில் வெள்எயிற் றரவின் வெவ் விடத்தை மாய்க்குமா நெடு மந்திரம் தந்ததோர் வலியின் நோய்க்கும் நோய்தரு வினைக்கும்.கின் பெரும்பெயர் கொடியின் நீக்குவாய் கினே கினைக்குவார் பிறப்பு என ங்ேகும். U2) கொடிய பயங்கரமாய் மூண்ட நெடிய மாயக் கோம்மங் களைக் குறித்து இராமன் வினவியதற்கு மாதலி இவ்வாறு விடை கூறியிருக்கிருன். பாகனுடைய பதில் மொழிகள் விவேக ஒளி களே வேளியே விசி யிருக்கின்றன. இராம சாகா இது இராவ ணன் செய்த மாயவேலை; மாயையைச் சிந்தனை செய்து மக்திர முறையோடு மாயாத்திரத்தை அவன் ஏவியிருத்தலால் இந்த விசித்திரமான மாய்த் தோற்றங்கள் இங்கே தோன்ற சேர்க்கன. நேரே நீண்டுள்ள சேனைகள் யாவும் கானல் நீர்போல் பொப் யான மாயக் காட்சியே: மகா மேதையான உன்னிடம் அக்கப் பேதை இப்படிப் பிழையாகப் பேயாட்டம் ஆடியிருக்கிருன்; கொல்லன் தெருவில் ஊசி விற்கப்போன ஒரு மூடனைப்போல் அவன் பீடை புரிந்துள்ளான்; தீய இந்த மாயத் தோற்றம் யாவும் தாய உன் ஞானப் பகழியால் விரைந்து தொலைக்க ஒழி யும்; அதனைத் தொடுத்து இந்தக் கொல்லைகளை ஒல்லையில் ஒழிக் தருளுக” என மாகலி சொல்லவே இராமன் உள்ளம் உவந்து உரியவனை வியந்தான்; உறுதியாய் வேலை செய்ய விரைந்தான். இருப்புக் கம்மியன் என்றது கொல்லன. இரும்பு வேலையை விரும்பிச் செப்பும் வினையாளன் என்பது பொருள். அந்தக் கொல்லன் எல்லாருக்கும் நல்ல இரும்புச் சாமான்களைச் செப்து தரவல்லவன். அவனிடம் கொண்டுபோப் ஊசியை ஒருவன் விலக்கு விற்க நேர்ந்தால் அது அங்கே விலையாகாத இனம் தெரியாத மடையன் என்று அவனும் எள்ளி இகழ்ந்து தள்ளப் படுவன். அந்தப்பழிவழியில் விழியிருபதுடையவன் விழுந்துளன். மகா மாயாவியான மாயனே இராமளுப் ஈண்டு வந்திருக் கிருன்; இந்த அதிசயமான தாய மாயனிடம் தீய மாயத்தை இராவணன் செய்ய நேர்ந்தது கொல்லனிடம் ஊசி விற்கப் போ னது போன்ற ஒர் மூடத்தனமே என ஈண்டு முடிவாய் கின்றது.